விஜய்யின் பகவதி திரைப்படத்தில் அவருக்கு சகோதரனாக அறிமுகமானார் நடிகர் ஜெய். 2002 நவம்பர் 4ல் அந்தப் படம் ரிலீஸ் ஆனது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் திரையுலகில் வலம் வரும் அவர் பெண்கள் விரும்பும் நடிகர்கள் பட்டியலில் இருக்கிறார்.


அண்மையில் அவர் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:


நான் முதன்முதலில் பகவதி படத்தில் விஜய் அண்ணாவுக்கு தம்பியாக நடித்தேன். ஆனால் அப்போது எனக்கு அவ்வளவோ நடிப்பு தெரியாது. இப்போது சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகப்போகிறது. இப்போது திரை அனுபவம் நிறைய கிடைத்துள்ளது. சினிமாவில்1ல் இருந்து 100 இடங்களுக்குள் எனக்கென்று ஒரு இடம் இருக்குன்னு நம்புறேன். ஒவ்வொரு படமும் ஹிட் கொடுக்கணும்கிற பதற்றம் இருந்துகிட்டுத்தான் இருக்கும். ஏனென்றால் நம் கரியரில் எத்தனை படம் ஹிட் கொடுத்திருக்கிறோம் என்று பார்க்க மாட்டார்கள். கடைசி படம் ஹிட்டா என்று தான் பார்ப்பார்கள். அதனால் ஒரு படம் ரிலீஸ் ஆகுதுனா அது ஹிட் அடிக்கணும்கிற பதற்றம் ரஜினி சார் வரைக்கும் எல்லோருக்குமே இருக்கும்.


சினிமாவில் எனக்குன்னு ரசிகர்கள் என்ன பட்டம் கொடுத்தாலும் சரி தான். ஆனால் நான் அதற்கு தகுதியான இடத்திற்கு வர வேண்டும். எனக்கு டார்லிங் என்ற வார்த்தை ரொம்பப் பிடிக்கும். ஏன்னா அம்மாவை அப்பா அப்படித்தான் கூப்பிடுவாங்க. அதனால டார்லிங் என்ற வார்த்தைன்னா என்னப் பொருத்தவரை அன்பு. எனக்கு யார் மீது அன்பு அதிகமாக இருக்கோ அவர்களை அப்படிக் கூப்பிடுவேன். அதனால் என்னை டார்லிங் ஜெய் என்று கூப்பிட்டால் பிடிக்கும். ஆனால், இளைய தளபதி இப்போ தளபதி ஆகிட்டதால அந்த டைட்டில் காலியாக இருப்பதால் அந்த தகுதியை நான் வளர்த்துகிட்டா எனக்கு மக்கள் அந்த டைட்டிலைக் கொடுத்தால் சந்தோஷப்படுவேன்.


எனக்கு புதுமுக இயக்குநர்களுடன் வேலை செய்வது பிடிக்கும். வெங்க்ட பிரபு, எங்கேயும் எப்போதும் சரவணன், இப்போ எண்ணித் துணிக வெற்றிச் செல்வன் எல்லோருமே எனக்கு ஃபேவரைட் தான். நான் பகவதி பண்ணும்போதே நான் ஹீரோ ஆனால் நிறைய புதுமுக இயக்குநர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதைத் தான் இப்போது செய்கிறேன்.


விஜய் சொன்ன அட்வைஸ்:



நான் விஜய் சாரை ஒருமுறை ஃப்ளைட்டில் பார்த்தேன். சுப்பிரமணியபுரம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் இருக்கும். அப்போதுதான் நான் அவரை சந்தித்தேன். அவரிடம் அண்ணா எனக்கு ஒரு சான்ஸ் என்றேன். ஏண்டா நீ இப்போ ஹீரோ ஆகிட்டியா. ஃப்ளாப் வருதுன்னு பயந்திட்டியா என்றார். அப்புறம் சொன்னார் ஒரு ஹீரோ நாலு ஃப்ளாப் வரைக்கும் தாங்கலாம். ஆனால் ஐந்தாவது படம் ஃப்ளாப் ஆகாத படி கதையை கேர்ஃபுல்லா தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுரை சொன்னார். அப்புறம் தான் எனக்கு ஒரு தெளிவு வந்தது. எனக்கு இப்போ ஹிட், ஃப்ளாப் எல்லாவற்றையும் ஒரே மனோபாவத்தில் அணுகிற தன்மை வந்திருக்கு. ஒரு படம் ஃப்ளாப் ஆனா அதைப் பற்றி அனலைஸ் பண்ணி நேரத்தை வேஸ்ட் பண்ணாமல் வாட் நெக்ஸ்ட் என்று மூவாகிறேன். ஏனால் அந்த ஃப்ளாப் அனுபவமே உங்களை க்ளென்ஸ் செய்துவிடும்.


இந்தக் காலத்து கார்த்திக்:



என்னை இந்த ஜெனரேஷன் கார்த்திக் என்று யாராவது அழைத்தால் நான் ரொம்ப ஹேப்பி ஆகிவிடுவேன். ரஜினி சார், கமல் சார் ப்ளேஸுக்கு எல்லாரும் சண்டை போடுவாங்க. ஆனால் கார்த்திக் சார் ப்ளேஸ் என்று ஒன்று இருக்கு. அது யாருக்கும் தெரியாது. அந்த ப்ளேஸுக்கு வர உனக்கு எல்லா தகுதியும் இருக்கென்று அமீர் சார் சொன்னார். இப்ப வரைக்கும் என்னிடம் நிறைய பேர் அதை சொல்லிட்டாங்க. உண்மையில் மக்கள் என்னை இந்த ஜெனரேஷன் கார்த்திக்கா ஏத்துகிட்டா சந்தோஷம் தான். என் அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச நடிகர் கார்த்திக் என்பதால் அதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.
இவ்வாறு ஜெய் அந்த கலகல பேட்டியில் அதிரடியாக சரவெடியாக பேசியுள்ளார்.