Bhakiyaraj: பாக்யராஜ் நடிப்பில் "இது நம்ம ஆளு" திரைப்படம் இன்றும் எவெர்க்ரீன்... என்ன காரணம்? 


தமிழ் திரையுலகில் உதவி இயக்குனராக தமிழ் திரையுலகிற்குள் அடி எடுத்து வைத்தவர் பாக்யராஜ். பிறகு தமிழ் சினிமாவில் நடிகர், வசன எழுத்தாளர், இயக்குனர், திரைக்கதை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பாக்யராஜ். 80'ஸ் ஹீரோக்களில் முன்னணி நாயகனாக வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். பாக்யராஜ் அவர்களின் எதார்த்தமான நடிப்பு, நகைச்சுவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 


1988ல் பாலகுமாரன் இயக்கத்தில் பகவதி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே. கோபிநாதன் தயாரிப்பில், நடிகர் பாக்யராஜ் - நடிகை ஷோபனா நடிப்பில் வெளியான "இது நம்ம ஆளு" திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ம் தேதி, 1988ல் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு பாக்யராஜே இசை அமைத்து படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். 


 



முருங்கைக்காய் செண்டிமெண்ட்:


அவருடைய படம் என்றால் ரசிகர்களிடம் முருங்கைக்காய் செண்டிமெண்ட் போன்ற ஏதாவது ஒரு ஹிண்ட் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்ப்பார்கள். இதுவே அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அந்த எதிர்பார்ப்பு "இது நம்ம ஆளு" திரைப்படத்தின் மூலமும் ரசிகர்களுக்கு ஒரு இன்ட்ரெஸ்டிங் மெசேஜ் கிடைத்தது. ஜாதிபிரிவினை பற்றி மிகவும் அழகாக எடுத்துரைத்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. 


இந்த திரைப்படத்தில் பாக்யராஜ், கோபாலசாமி எனும் ஏழை பட்டதாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்காக பிராமண வேஷம் போட்டு கடைசியில் மாட்டியும் கொள்கிறார். ஜாதி மத வேறுபாடு பார்ப்பதை மிகவும் நாசுக்காக சொல்லியிருப்பார். 


நகைச்சுவைக்கு அளவில்லை:


பாக்யராஜ் பூஜையின் போது ஸ்வாகா போடுவது, திருமணத்திற்காக போலியான அம்மா அப்பாவை ரெடி செய்து அழைத்து வந்து வசமாக மாட்டி கொள்வது, அவருக்கு உரித்தான ஸ்பெஷல் டயலாக் இனி பெண்ணை தொடமாட்டேன் என்று கூறுவது அனைத்தும் ரகிகர்களை கவர்ந்த படத்தின் ஹைலைட் காட்சிகள். தனது எதார்த்தமான வசனங்களால் பல இடங்களில் சாதி பார்ப்பவர்களுக்கு சவுக்கடி கொடுத்திருப்பார். 


கதாபாத்திரங்களாக வாழ்ந்த நடிகர்கள்:


ஸ்ரீனிவாச சாஸ்திரியாக நடித்த ஜே.வி. சோமயாஜுலு பிராமணரின் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார் என்பதை விடவும் மிரட்டியிருந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி விட்டார். அவரின் கம்பீரமான நடிப்பு, க்ளைமாக்ஸில் பாக்யராஜ் பேசும் வசனம் என அனைத்தும் இது நம்ம ஆளு திரைப்படத்திற்கு ஸ்கோர் பெற்று தந்தது. நடிகை ஷோபனாவும் பானு கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடிப்புக்கு இணையாக பிரமாதமாக நடித்திருந்தார். மேலும் நடிகை மனோரமா, குமரிமுத்து, டப்பிங் ஜானகி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் கிருஷ்ணன் ஐயர் கதாபாத்திரத்தில் திரு. கலைஞானம் அவர்கள் சிறப்பாக நடித்திருந்தார்.  


இசையமைத்து பாடிய முதல் படம்:


பாக்கிராஜ் இசையமைத்த முதல் திரைப்படம் இது நம்ம ஆளு. இந்த படத்தின் படலங்கள் அனைத்துமே செம்ம ஹிட். இன்றும் பலரும் ரசிக்கும் இந்த பாடல்களில் பச்சை மலை சாமி ஒண்ணு என்ற பாடலை பாடியிருந்தார் பாக்யராஜ். 


வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது இந்த திரைப்படம் என்றால் அது மிகையல்ல.