மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ஐடென்டிட்டி’ (Identity).
டொவினோ தாமஸ் உடன் நடிகை த்ரிஷா இந்தப் படத்தில் நடித்துள்ளார். அகில் பால், அனஸ்கான் ஆகியோர் திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராகம் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் வெளியாகியுள்ளது. டொவினோ தாமஸ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் பற்றிய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அவற்றை காணலாம்.
'க்ரைம் த்ரில்லர் படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். “ திரைப்படத்தின் முதல் பாதி நெருப்பு மாதிரி.. தொழில்நுட்ப ரீதியிலாகவும் திரைப்படம் சூப்பர். த்ரில்லரிங் சீன்களை மிஸ் செய்ய வேண்டாம்”. என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ஐடென்டிட்டி படத்தின் திரைக்கதை நேர்த்தியாக உள்ளதை குறிப்பிட்டு இன்னொரு ரசிகரின் பதிவில்.” சிறந்த ஸ்டோரி லைன்; சுவாரஸ்யமான திரைக்கதை. க்ரைம் த்ரில்லர் சூப்பராக இருக்கிறது. டொவினோ தாமஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். பின்னணி இசை, டிவிஸ் என எல்லாமே அற்புதம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு நபர், “திரைப்படம் தொடங்கும்போது மெதுவாக இருப்பதுபோன்று தெரிந்தது. ஆனால், சிறிது நேரம் கழித்து திரைப்படம் சூப்பர் ஹிட் என தோன்றும் அளவுக்கு இருந்தது. நல்ல க்ரைம் த்ரில்லர்.” என்று பதிவிட்டுள்ளார்.
டொவினோ தாமஸ் - த்ரிஷா நடிப்பு:
புத்தாண்டின் முதல் திரைப்படமாக ’ஐடென்டிட்டி’ சிறப்பாக இருப்பதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். “ மிகச் சிறந்த திரைக்கதை. டொவினோ, த்ரிஷா இருவரின் நடிப்பும் சூப்பர்.. திரைப்படம் சூப்பர்ர்ர்,”
திரைப்படத்தின் இடைவேளை காட்சி பற்றி தெரிவித்துள்ள ஒருவர்.” ’ஷோ ஸ்டீலர்’ இன்டர்வெல் ப்ளாக். சிறந்த திரைக்கதை.” என்று குறிப்பிட்டுள்ளார்.