சிறு வயதில் என் அருகில் அமர்ந்திருந்த பையன் மீது காதல் இருந்தது எனவும், எனக்குக் கண்டிப்பாக லவ் மேரேஜ் தான் என மனம் திறந்துள்ளார் பேட்ட பட நாயகி மேகா ஆகாஷ்.
தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் பேட்ட படத்தின் அறிமுகமானார் நடிகை மேகா ஆகாஷ். அனு என்ற கதாபாத்திரத்தில் பேட்ட படத்தில் வலம் வந்தவர், இதற்கு முன்னதாக 2017-ஆம் ஆண்டு "லை" என்னும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியிருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் பேட்ட படம் தான் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் சிம்புடன் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆதர்வா முரளிக்கு ஜோடியாக பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா என பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதியின் யாதும் ஊரோ யாவரும் கேளிர் படத்தில் நடித்து வருகிறார் நடிகை மேகா ஆகாஷ். இப்படத்திற்கான டீசர் வெளியான நிலையில் படப்படிப்புகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த சூழலில் தான் மேகா ஆகாஷ் பேட்டி ஒன்றில் காதல் குறித்து அவரின் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் விதமாக பேசியிருந்தார். அப்படி என்ன சொல்லி இருந்தார் தெரியுமா? சமூகத்தில் பெண்ணாக பிறந்தால் அவர்கள் பல்வேறு நிலைகளில் பல தரப்பான அன்புகளைப்பார்கக் நேரிடும் எனவும் குறிப்பாக சிறுவயதில் அம்மா அப்பா மீதான அன்பு, திருமணத்திற்கு பிறகு கணவரின் அன்பு அதன்பிறகு குழந்தைகள் அன்பு என்று அனேக அன்புகளை படிப்படியாக பார்க்க வேண்டி இருக்கிறது என தெரிவித்திருந்தார். மேலும் நம்மை நல்ல மனிதர்களாக வளர்த்து விடுவது பெற்றோர் காட்டும் அன்புதான் எனவும் கூறியிருந்தார்.
மேலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அன்பு என்பது பெரிய விஷயம் மட்டுமில்லை மிகவும் சிறந்தது எனவும்அதில் சுயநலம் கிடையாது என நடிகை மேகா ஆகாஷ் கூறியிருக்கிறார். இதோடு ஒரு பையனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்தால் அது காதல் கிடையாது என கூறிய அவர், எனக்கு நான்காம் வகுப்பில் எனது பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையன் மீது எனக்கு இஷ்டம் ( crush) இருந்தது. அதுதான் எனது முதல் காதல் எனவும் காதல் என்றால் என்ன என்று தெரியாத வயது அது என கூறியிருந்தார். ஆனல் நிஜ வாழ்க்கையில் நான் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்”என்று வெளிப்படையாக அவரது ஆசையை ஒரு போட்டியின் வாயிலாக பகிர்ந்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை மேகா ஆகாஷ் நடிக்கும் யாவரும் கேளீர் படத்தினை எஸ்.பி ஜனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக்கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.