சினிமாவில் சிலர் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பார்கள்; சிலருக்கு அது தன்னாலே அமைந்துவிடும்.  அனுஷ்கா என்றவுடன் நினைவுக்கு வருவது, கம்பீரமான தோற்றம்; தனிச்சிறப்புமிக்க நடிப்பு; ஜக்கம்மா; தேவசேனா; செளந்தர்யா; சரோஜா; இப்படி அனுஷ்கா நடித்த கதாப்பாத்திரங்கள் நம் மனதில் என்றும் பசுமையாக இருப்பவை. சினிமா, வாய்ப்பு, உள்ளிட்ட பல கேள்விகளுக்கு வெளிபடையாக மனம் திறந்த பதில் சொன்னவைகளின் தொகுப்பு. 


திரையுலகில் பயண திட்டம் குறித்து...


நான் சினிமாவிற்குள் வரும்போது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வந்தேன். எனக்கு பெரும் திறமையானவர்கள் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வித்தியாசமான பட வாய்ப்புகள் அமைந்தன. தென் இந்திய ரசிர்கள் என்னை கொண்டாடினர். இதெல்லாம் என் வாழ்வில் பெரும்பாக்கியமாக கருதுகிறேன். நான் நடித்த அனைத்து கதாப்பாத்திரத்திலும் நிறைவடைகிறேன். 






இயக்குநர் ராஜமெளலியுடன் ஐந்தாண்டு கால பயணம் எப்படி இருந்தது? 


ஐந்தாண்டு காலம் என்றாலும், யாரும் என்னை இதுபோன்ற நெடுங்காலம் எடுக்கக் கூடிய படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதில்லை. எல்லாரும் பாசிடிவாகதான் சொன்னார்கள். நான் யார் சொல்வதையும் கேட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். யார் என்ன சொன்னாலும், என் மனம் என்ன சொல்கிறதோ அதன் வழி நடப்பதே நான்.  என் மனதிற்கு சிறந்ததாக உணரும் கதாப்பாத்திரங்களை தேர்தெடுக்க தயங்கியதில்லை. 


நீங்களும் சினிமாவும்....


நான் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் என் எதிர்காலம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை. இன்னும் சொல்லபோனால், ஓராண்டில் எப்படியாது சினிமாவை விட்டு எப்படியாவது ஓடிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். நிறைய மக்களை சந்திக்க வேண்டியிருந்தது. எல்லாரும் சினிமா என்றவுடன் அழகு, கவர்ச்சி என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால், அழகும் கவர்ச்சியும் மட்டுமே சினிமா இல்லை. சினிமாவில் கடின உழைப்பும் அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். சினிமாவில் பல போராட்டங்களை கடந்துதான் வெற்றியடைய வேண்டும். பெண்களுக்கு கூடுதல் சவால்கள் இருக்கின்றன. நான் சினிமாவில் நிலைத்திருப்பேன் என்று நினைத்ததில்லை. 






உங்களைப் பார்த்து சினிமாதுறையை தேர்தெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


சினிமா துறை அழகானது. உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள். கடின உழைப்பு இருந்தால் நீங்கள் இங்கு ஜொலிக்கலாம். ஆனால், அழகு மட்டுமே பிரதானம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இங்கு எல்லாரும் அழகுதான். 


சாதிக்க துடிப்பவர்களுக்கு நீங்கள் சொல்வது ...


Smile- புன்னகைக்க மறக்காதீங்க. ஏன்னா, சிரிப்பு உங்களை நிகழ்காலத்தில் இருக்க அனுமதிக்கும். உங்கள் கனவுகளை நம்புங்கள். கடின உழைப்பு உடன் கூடிய ஸ்மார்ட் வோர்க் உங்கள் முன்னகர்வுக்கு உதவும். அவ்வளவுதான். என்றும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்,’’


 


இவ்வாறு அந்த பேட்டியில் அனுஷ்கா கூறியுள்ளார்.