வழக்கிலிருந்து விடுபட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அளித்த பேட்டியில் வழக்கு விசாரணையில் தான் போலீசாரிடம் கூறியது குறித்து வெளியே கூறியுள்ளார். அதில் அவர் 18 வயதில் கஞ்சா அடிக்க தொடங்கியதாகவும், யார் யார் கஞ்சா சப்ளை செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


கைது


பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொகுசு கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  இந்த விருந்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து அந்த சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்யன் கான் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.


விடுவிப்பு


இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு அண்மையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஆர்யன் கான் உள்ளிட்டோரின் பெயர் இடம் பெறவில்லை. மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என ஆறு பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.



கஞ்சா


கஞ்சா பழக்கம் குறித்து பேசிய அவர், "2018 ஆம் ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்தபோது பொழுதுபோக்கிற்காக கஞ்சா புகைக்க ஆரம்பித்தேன். கஞ்சா புகைத்தல் அங்கு சட்டப்பூர்வமானது. மேலும், எனக்கு சில தூக்கப் பிரச்சினைகள் இருந்தன. சில இணைய கட்டுரைகளில், தூக்கத்திற்கு கஞ்சா உதவும் என்று படித்தேன். மார்ச் 2020 இல், எனது படிப்பை முடித்துவிட்டு மும்பை வந்தேன். பின்னர், எனது நண்பர்களில் ஒருவரான ஆதிஷ் துக்கல் மூலம், இறக்குமதி செய்யப்பட்ட கஞ்சாவை வாங்கினேன். ஒரு கிராமுக்கு 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை கொடுத்தேன். அவர் எனக்கு 7,8 வருடமாக நண்பர். அவரும் கஞ்சா புகைப்பார்." என்று கூறினார். 


வாட்சப் சாட் குறித்து


வெளியான வாட்ஸ் அப் சாட் குறித்து பேசுகையில், "நான் ஆகஸ்ட் 2019க்கு பிறகு அனன்யா பாண்டே என்ற என் தோழியிடம் கஞ்சா வாங்கினேன். அதற்கான சாட் தான் வழக்கில் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த கஞ்சா அவருக்கு அவரது தங்கையிடம் இருந்து கிடைத்தது. அவரது தங்கையின் நண்பர்கள் கொடுத்ததாக கூறினார். ஆனால் அவரது தங்கையும் கஞ்சா பயன்படுத்த மாட்டார் என்பதால் என்னிடம் கொடுத்தார்கள். இன்னொரு சாட்டில் நான் புர்ஜ் கலீஃபா பார்ட்டியில் சந்தித்த ஒருவர் எனக்கு கஞ்சா கொடுத்தார். அவர் லண்டனை சேர்ந்தவர். ஓமர் என்று ஒருவர் தயாரித்த கஞ்சா அது." என்று கூறினார்.  



June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


குரூப்பில் பேசியது என்ன?


நார்கோட்டிக்ஸ் பதிவு செய்திருந்த 'டைட்டில் அண்டிசைடட்' என்ற குரூப்பில் பேசியது குறித்து கேட்கையில், "அந்த குரூப்பில் நாங்கள் திரைப்பட இயக்கம் குறித்து தான் பேசுவோம். ஒருநாள் நண்பர் ஒருவர் கொக்கைன் உள்ளது என்று கூறினார்.


க்ரூஸ் கப்பல் விவகாரம்


கப்பலில் நாங்கள் போக்கர் கேம் தான் விளையாடினோம். அப்போது என்னிடம் ஒரு நபர் 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிவிட்டார். அதனால் அதனை திருப்பி தர முடியாவிடில், மொத்தமாக கஞ்சாவாக தந்துவிடுங்கள் என்று கூறினேன். ஆனால் பின்னால் அவர் 40 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்து விட்டார். இன்னும் மீதமுள்ள தொகையை தரவில்லை.