”நீங்க அப்பாவ கிடைக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கணும் “ - ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி

” நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ளும் நபரும், உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் நபரும் உங்கள் பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்”

Continues below advertisement

தமிழ், தெலுங்கு துறைகளில் முன்னணியில்  நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களிலும் இவர் செம ஆக்டிவ் . அவ்வப்போது வித்தியாசமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றி ரசிகளை எங்கேஜ்டாக வைத்திருப்பார். நடிகை சுருதிஹாசன் தந்தை கமலுடன் இருக்கும் அன்பான உறவு குறித்து அடிக்கடி சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவார் என்பது அறிந்ததே. இந்நிலையில் இன்று கொண்டாடப்படும் தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.   ஸ்ருதி பகிர்ந்துள்ள வாழ்த்து புகைப்படத்தில், நடிகர் கமல் மகள் ஸ்ருதியுடன் வேடிக்கையாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. கமலுக்காக நடிகை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ள தந்தையர் வாழ்த்தில் ”நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ளும் நபரும், உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் நபரும் உங்கள் பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் , என்னுடைய அன்புக்குரிய அப்பாவாக இருப்பதற்கு நன்றி , இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்“ என குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

ஜூன் 20-ஆம் தேதியான இன்று உலகம் முழுவது தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலரும் தங்களது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. சாமானியர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் தந்தையர் தினத்தன்று வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நடிகை ஜெனிலியா தனது கணவர் ரித்தேஷ் தேஸ்முக்கிற்கு வீடியோ ஒன்றை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில்  ரிதேஷ் தனது இரண்டு மகன்களுடன் ஃபோட்டோ ஷூட்டில் செய்த சேட்டைகள் இடம்பெற்றுள்ளன. தான் பதிவிட்ட வீடியோவிற்கு கீழே “ உலகின் சிறந்த அப்பாவாக இருப்பதற்கு நன்றி!, உங்களுக்கு செலவிட போதிய நேரம் கிடைக்கவில்லை என்றாலும், மகன்களை ஈர்க்க நீங்கள் ஒருபோதும் தவறியதில்லை. என்னுடன் இணைந்து  குழந்தைகள் வளர்ப்பில் ஈடுபாடு செலுத்துவதற்கு நன்றி “ என தெரிவித்துள்ளார் 

இதேபோல பிரபல கிரிக்கெட் வீரர்  ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ எல்லா நாளும் தந்தையர் தினம்தான், உங்களை பிரிந்து 21 வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் நீங்கள் எப்போது என் பக்கத்தில் இருப்பது போலவே உணர்கிறேன் அப்பா, தந்தையர் தின வாழ்த்துக்கள்” குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல ஹர்பஜன் சிங் மனைவி கீதா பஸ்ரா, ஹர்பஜன் சிங் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “உலகின் தலைசிறந்த அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள், எங்களுக்கு எப்போது சிறந்ததில் சிறந்ததை கொடுப்பதற்கு நன்றி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் “ என பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement