பிக்கு படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள பாலிவுட் நடிகை தீபிகா படூகோன் இன்றைய நாளில் தான் நடிகர் இர்ஃபான் கானை மிகவும் மிஸ் செய்வதாக கூறீயுள்ளார்.


தீபிகா படுகோன் இர்ஃபான் கான், அபிதாப் பச்சன் ஆகிய மூவரும் இணைந்து நடித்த படம் தான் பிக்கு.கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது.இந்த படத்தை சுஜித் சர்கார் இயக்கியிருந்தார்.உடல் நிலை சரியில்லாத தனது தந்தையை கவனித்துக்கொண்டு தனது தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள போராடும் ஒரு பெண் தான் பிக்கு.


இவர்களின் வாழ்க்கையில் எதேச்சையாக வந்து சேர்பவர் இர்ஃபான் கான். இந்த மூவருக்கும் இடையிலான கதைதான் படம். பிக்கு திரைப்படம் தீபிகா படுகோன் ரசிகர்களின் மனதில் என்றும் ஒரு ஸ்பெஷலான திரைப்படமாக நிற்கக்கூடிய அந்தஸ்த்தை இந்த எட்டு ஆண்டுகளில் பெற்றுவிட்டிருக்கிறது.ஆனால் இந்த மகிழ்ச்சியான தருணத்தின் நம் அனைவர் மனதிலும் குறையாக இருப்பது இர்ஃபான் கான் மட்டும்தான். இர்ஃபான் கான் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் அன்று புற்று நோயால் காலமானார்.இந்த தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா படுகோன் பகிர்ந்துகொண்டார்.மீண்டும் ஒரு முறை இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யோசிக்காமல் தான் நடிக்க ஒப்புக்கொள்வேன் என அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் தான் இர்ஃபான் கானை மிஸ் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார் தீபிகா.


இர்ஃபான் கான் இந்திய சினிமாவில் மிகவும் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர்.மிக எதார்த்தமான நடிப்பிற்காக அதிகம் பாராட்டப்பட்டார், இர்ஃபான் கான். தி நேம் சேக், பான் சிங் டோமர்,தி லஞ்ச் பாக்ஸ், தல்வார்,பிக்கு லைஃப் ஆப் பை முதலிய பங்களில் நடித்த இர்ஃபான் கான் பாலிவுட்டில் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் பரவலாக அறியப்பட்டார். தி ஜுர்ராசிக் வர்ல்ட் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் இர்ஃபான் கான். கடந்த 2011 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. இர்ஃபான் கான் கடந்த 2018-ஆம் ஆண்டு தான் நியூரோ எண்டோக்ரின் என்னும் நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த 2020-ஆம் ஆண்டு அவர் மும்பையில் காலமானார்.


இர்ஃபான் கானின் இழப்பு திரையுலகில் இருந்த அனைவரையும் பாதித்தது. அவரது ஒவ்வொரு படங்களின் வழியாகவும் அவரது ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள். இன்று பிக்கு படக்குழுவினர் அதிகம் மிஸ் செய்யும் ஒரு நபராக இர்ஃபான் கான் இருக்கிறார்.