தன்னை ஆன்ட்டி என்றழைந்த்து ட்ரொல் செய்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் ஜெனீலியா.


ஜெனீலியா.. தமிழில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் கூட ஜெயம் ரவியுடன் அவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படம் தான் முதலில் நினைவுக்கு வரும். அதில் அவர், சந்தோஷ்.... என்று நீண்ட இழுவையுடன் கூறும் காட்சிகளில் தமிழ் சினிமா உருவாக்கிய 'லூசுப் பெண்' கேட்டகிரியில் ஆகச்சிறப்பாகப் பொருந்தியிருப்பார். முட்டாள்தனமான சென்டிமென்ட், இம்மெச்சூர் ஆட்டிட்யூட், சாலையைக் கடக்கக் கூட பயம் இப்படியெல்லா இருக்கும் ஹீரோயின் தான் தமிழ் சினிமாவின் லூசுப் பெண் கேட்டகரியில் ஃபிட்டாகும் கதாநாயகிகள். நல்ல வேளையாக இப்போதுள்ள பெரும்பாலான கதாநாயகிகள் தங்கள் பாத்திரத்துக்கு ஓர் அர்த்தம் வேண்டும் என்று டிமாண்ட் செய்யும் அளவுக்கு வளர்ந்து வருகின்றனர்.


சரி, இது வேறு அத்தியாயம். நான் ஜெனீலியாவின் கதைக்கு வருவோம்.


ஜெனீலயாவும் அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். அன்றாடம் ஏதாவது வீடியோ வெளியிட்டு விடுவார்கள். இவர்களின் வீடியோவைப் பார்க்கவே ரசிகர்கள் பலர் காத்திருப்பர். அடிக்கடி ஜெனீலியா வீட்டில் நடைபெறும் பார்ட்டிகள் இந்த வீடியோக்களில் இடம்பெற்றிருக்கும். இதுதவிர ஜெனீலியா, ரிதேஷின் லவ் ஸ்டோரி, இருவரின் குட்டிக் குட்டிச் சண்டை என வெரைட்டியாக வீடியோ போடுவது இந்தத் தம்பதியின் ஸ்டைல். இணையம் என்றால் கொண்டாட ஆயிரம் பேர் இருந்தால் ட்ரோல் செய்யவும் ஆயிரமாயிரம் பேர் இருப்பார்கள் அல்லவா? அப்படித் தான் ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறார் ஜெனீலியா.


பாலிவுட் பிரபலமான அர்பாஸ் கான், பின்ச் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது நம் காஃபி வித் டிடி ஸ்டைல் நிகழ்ச்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் இப்போது தொடங்கியுள்ளது. இதில் ரிதேஷ் தேஷ்முக், ஜெனீலியா தம்பதி கலந்து கொண்டுள்ளனர். இதற்கான புரோமா நிகழ்ச்சி வெளியாகியுள்ளது. இப்போது இந்த புரோமா தான் யூடியூபில் ஹாட்டாக வைரலாகிக் கொண்டிருக்கிறது.




அந்தப் புரோமோவில் ஜெனீலியா தன்னை 'வெட்கமில்லாத, வக்கிரமான ஆன்ட்டி. எப்போதும் ஓவர் ஆக்ட் செய்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய பின்னர் எதற்கு இது. இவரது நடவடிக்கைகளைப் பார்த்தால் இவரது குழந்தைகளே தர்மசங்கடத்திற்கு உள்ளாவர்கள். அந்தக் குழந்தைகள் நாம் கூட இப்படி ஆட்டம்போடுவது இல்லையே என்று நினைப்பார்கள்' என்று விமர்சித்து ட்ரோல் செய்த நபருக்கு பதிலளித்திருக்கிறார். அந்தப் பதிலில் ஜெனீலியா, ஐயோ பாவம் இந்த நபருக்கு வீட்டில் இன்று நாள் நன்றாக அமையவில்லை போல. அண்ணா. நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


அதேபோல் ரிதேஷ் தேஷ்முக்கும் ட்ரோல்களை தான் எப்படி சமாளிக்கிறேன் என்பது பற்றி கூறியுள்ளார். ட்ரோல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். பொதுவெளியில் இருக்கும்போது இவ்வாறான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை மனதில் போட்டுக் குழப்பாமல் மறந்துவிட வேண்டும். என்னை ட்ரோல் செய்பவர்கள் அனைவருக்கும் எப்போதும் ஒரே பதில் தான் லவ் யூ டூ மை ஃப்ரெண்ட் என்று பதில் அளிப்பேன் என்றார்.


அர்பாஸ் கான் தனது பின்ச் நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் அவர்கள் குறித்த மிக மோசமான ட்வீட் அல்லது பேஸ்புக், இன்ஸ்டா பதிவை சுட்டிக்காட்டி அது குறித்த அவர்களின் கருத்தைப் பெறுவார். அப்படி அவர் கேட்டபோதுதான் ஜெனீலியா, ரிதேஷ் தம்பதி இந்த பதிலைக் கொடுத்துள்ளனர்.