தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இரண்டு படங்களின் வெற்றியால் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இதில் கைதி விக்ரம் இரண்டு இரண்டு படத்திலும் நடித்திருந்தார் விஜய் டிவி தீனா. லோகேஷ் சினிமேட்டிக் யூனிவெர்ஸின் காமாட்சியான தீனா லோகேஷின் தீவிர ரசிகராம்.



லோகேஷுக்கு கிப்ட்


ஒரு யூட்யூப் சேனலில் சந்தித்த இருவரும், சில ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். இருவரும் எப்படி கைதி திரைப்படத்தின் மூலம் இணைந்தார்கள், எப்படி நிகழ்ந்தது என்றெல்லாம் பேசி இருந்தார்கள். அது மட்டுமின்றி லோகேஷுக்காக தீனா ஒரு ஸ்பெஷல் கிப்ட் வாங்கி வந்திருந்தார். ஒரு டைரக்டர் சேர் வாங்கி வந்து அதில் லோகேஷை அமர வைத்து பார்க்க வேண்டும் என்றார். அவர் அதில் அமர, பின்னால் கை கட்டி நின்று கொண்டு, தேவர் மகன் போஸ்டரை ரீகிரியேட் செய்தார்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


லோகேஷை பற்றி தீனா


லோகேஷ் மீது ஏன் இவ்வளவு அன்பும், மரியாதையும் என்று கேட்டபோது தீனா, "நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடியனாக இருந்த போது, நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தன ஆனால், எல்லாமே காமெடி ரோல்களாக இருந்தன. நான் எல்லோரிடமும் வித்யாசமான கதாப்பாத்திரங்கள் தாருங்கள் என கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு யாரும் அப்படி ஒரு ரோல் கொடுக்கவே இல்லை. லோகேஷ் அண்ணன் தான் என்னை நம்பி, இந்த கேரக்டர் கொடுத்தாங்க, அதுமட்டும் இல்லாம, அதுல என்னோட இன்புட்ஸ கொடுக்க சொன்னாங்க, எனக்கு தோன்றத எழுத சொன்னாங்க." என்றார். 



தீனாவை பற்றி லோகேஷ்


அதற்கு பதில் அளித்த லோகேஷ், "இல்ல , நம்ம கிட்ட இருக்குற எல்லார்கிட்டயும் இருக்குற நல்ல விஷயங்கள் எல்லாம் படத்தில சேர்ந்தா நல்லது தானே. நான் முதல்ல தீனாவ அப்ரோச் பண்ணும்போது, அவர் ஒரு படத்துல ஹீரோவா கமிட் ஆகிட்டார், இதுல எப்படி சின்ன ரோல் பண்ணுவார்ன்னு கேட்டாங்க. ஆனா நான்தான் நானே பேசுறேன், எனக்கு நம்பர் கொடுங்கன்னு சொல்லி பேசி, நீ வா எல்லாம் பாத்துக்கலாம்ன்னு சொன்னேன்." என்றார். 


அப்போது தீனா, "உங்களோட பயோபிக் ரைட்ஸ என் கிட்டதான் கொடுக்கணும்" என்று கோரிக்கை வைத்தார். அதற்கு லோகேஷ், "டேய், நாலு படம் தான் டா பண்ணிருக்கேன், அதுக்குள்ள பயோபிக் ரேஞ்சுக்கு பேசுறீங்களேடா", என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.