தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பல வருடங்களாக வலம் வருபவர் பார்த்திபன். இவருடைய கற்பனை எல்லைக்கு அளவு கிடையாது. அப்படி சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த வித்யாசமான படங்களான ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன. பார்த்திபனும் பிரபல நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்து. ஆனால் 2001 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து தனித்தனியாக சென்றுவிட்டனர். இவர்கள் பிரிவிற்கு காரணம் பார்த்திபனை சீதா சந்தேகித்தது தான் என்று அப்போது கூறப்பட்டது. அதன் பிறகு சில வருடங்கள் தனியே வாழ்ந்து வந்த நடிகை சீதா, கடந்த 2010 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.



இரண்டாவது விவாகரத்து


சதீஷுடன் ஆறு வருடங்கள் ஒன்றாக சேர்ந்து இருந்த அவர் 2016 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். பார்திபனுக்கும் இவருக்கும் விவாகரத்தாகி பல வருடங்கள் ஆனதால் பெரிதாக வெளியில் ஒருவரை பற்றி ஒருவர் பேசிக்கொள்வதில்லை. ஆனால் சமீபத்திய நேர்காணல்களில் பார்த்திபன் தனது மனைவி குறித்தான சில விஷயங்களை பகிர்ந்தார். அந்த கூற்றுக்களை சீதாவிடம் கேட்டால் அவற்றை மறுக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்: சதுரங்க வேட்டையை மிஞ்சும் நிஜக்கதை! துபாய் தப்பிச் சென்றாரா ஐஎஃப்எஸ் இயக்குனர்? தீயாய் பரவும் தகவல்!


எதிர்பார்ப்புகள் காரணமா


பிரிவிற்கு காரணம் சீதா அதிகமாக எதிர்பார்த்ததுதான் என்று பார்த்திபன் கூறினார் என்பது குறித்து கேட்டபோது ஆச்சரியப்பட்டு சிரித்த அவர், "ஆமாம் என்னிடம் எதிர்பார்ப்புகள் இருந்தன. நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள், அவரும் அப்படிதான். நான் எப்படி என்றால் சுஹாசினி ஒரு படத்தில் பாடுவார்களே, 'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்', என்று பாடும் அந்த எதிர்பார்ப்பு தான் என்னிடம் இருந்தது. கணவரிடம் இருந்து அந்த அன்பை எதிர்பார்க்க கூட எனக்கு உரிமை இல்லையா", என்றார். 



அவர் சொன்னது பொய்


சீதா காதலை சொல்லும்போது நான் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் இருந்தேன் என்று சொல்கிறாரே என்பதை கேட்டுவிட்டு அதிர்ந்த அவர், "அது முற்றிலும் பொய், எனக்கு தினமும் ஃபோன் செய்து அந்த மூணு வார்த்தையை மட்டும் சொல்லு, என்று கேட்டு கொண்டே இருப்பார். நானும் யோசிச்சுட்டே இருந்தேன். எனக்கும் அவர் மீது காதல் இருந்ததால் அன்று ஒருநாள் ஐ லவ் யு சொல்றேன். எனக்கு நான் ஏதாவது தவறான முடிவு எடுத்தால், தானா பிரச்சினை வரும். அதே மாதிரி எங்க அப்பா வீட்டுக்கு கீழ இருந்த ரிசீவர்ல நான் சொன்னதை கரெக்ட்டா கேட்டுட்டார். நான் சொன்ன அன்னைக்கு பெரிய பிரச்சினை ஆச்சு. அப்படித்தான் காதல் நிகழ்ந்தது. அவர் சொன்னது பொய்", என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.