விஜய்டிவின் சீரியலில் இருந்து நான் விலகவில்லை, ஆனால் என்ன.. போர வரைக்கும் போவோம் என்று நடிகை ரக்சிதா இன்ஸ்டாவில் பதிவிட்ட கருத்து ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ரக்சிதா. ஆனால் அந்த அளவிற்கு மக்களிடம் பிரபலமாகவில்லை. இதனைத்தொடர்ந்து வந்த சரவணன் மீனாட்சி சீரியல் தான் அவரது வாழ்வில் மிகப்பெரிய டேர்னிங் பாயின்டாக அமைந்தது. நடிகை ரக்சிதா என்ற பெயர் அவருக்கு இருந்தாலும் மீனாட்சி என்றே மக்கள் மனதில் பதிந்தவர். இந்த சீரியலில் தொடர்ந்து இரண்டு சீசன்களில் மீனாட்சியாக நடித்த பெருமைக்குரியவராக இருந்து வந்தார். அப்போது தான் வெள்ளித்திரையும் கால்பதிக்க தொடங்கிய ரக்சிதா உப்புக்கருவாடு உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அதில் வரவேற்பு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் சின்னத்திரைக்கு வந்து விட்டார்.
இவர் விஜய் டிவியைத்தொடர்ந்து ஜூ தமிழில் நாச்சியார் சீரியலில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் கடந்த சில நாட்களாகவே எந்த எபிஷோடுகளிலும் வரவில்லை என்பதால் சீரியலில் இருந்து விலகியதாக செய்திகள் பரவின. இந்த சூழலில் தான் கன்னட படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும், அந்த படக்குழுவினரிடம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனால் இனி ரக்சிதா சின்னத்திரைக்கு வரமாட்டார் என அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிடத்தொடங்கிவிட்டனர்.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தான் நடிகை ரக்சிதா, “நான் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை விட்ட விலகவில்லை என்பதை இன்ஸ்டா வாயிலாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். “அதில் அதே தூண், அதே மாடி, அதே கதவு,அதே வீடு …. சோ.. எங்கேயும் போகல.இங்கேயே தான் இருக்கேன்..“ என தெரிவித்திருந்தார்.
மேலும் ஆனால் நான் விலகவில்லை, போற வரைக்கும் போவோம்… தானா நின்னா பாத்துக்கலாம், அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க, இத பெரிய செய்தியாக்காதீங்க, ஒரு பலனும் இல்ல, போறாங்க, போறாங்கனு சொல்லி நீங்களே போக வச்சிடுவிங்க போல, என குறிப்பிட்டுள்ளார். மேலும், நமக்கு அடி ஒண்ணும் புதுசு இல்ல..என்ன தான் நடக்கும்னு, போற வரைக்கும் போவோம், எனக்கு சப்போர்ட் பண்ண தான் நீங்க இருக்கீங்களே, என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம், என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த அவரது ரசிகர்கள் இப்ப நீங்க என்ன தான் சொல்ல வரீங்க.. என குழப்பத்தில் உள்ளனர்.