பிரபல முன்னணி நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடித்து, அவரது தந்தை நடிகர் விஜய குமார் தயாரிப்பில் வரும் 16 ஆம் தேதி வெளியாக உள்ள ' சினம்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்காக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படத்தினை யுவன் யுவதி, ஹரிதாஸ் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் குமரவேலன் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் குப்பத்து ராஜா சிக்ஸர் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த பலக் லல்வானி கதாநாயகியாக நடித்துள்ளர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்கு சேலம் வந்திருந்த சினம் படம் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது,
அப்போது அருண் விஜய் கூறுகையில், சினம் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல், யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளேன். எனது முந்தைய திரைப்படம் யானை - க்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு போல இந்த திரைப்படத்திற்கும் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. சினம் படத்தில் ப்ரமோஷன்காக செல்லும் அனைத்து இடங்களிலும் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து வாழ்த்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
கதாநாயகனாக நடிப்பதன் மூலம் சமூகத்திற்கு நல்ல தகவல்களை கொடுக்க முடிவதால் வில்லனாக நடிப்பதை தவிர்த்து வருகிறேன். விக்டர் போன்ற நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட முடியாத அளவுக்கு தொழில்நுட்பங்கள் தேவை. தொழில்நுட்பம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் திரைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதே எளிமையாக தடுக்க முடியும் என்று கூறினார். மேலும், தனக்கு திரை மற்றும் திரில்லர் படங்களின் வாய்ப்பு அதிக அளவில் வருவதாகவும், ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த ஜாலியான திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்ற அவர், மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரொமான்ஸ் படங்கள் நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் மக்கள் அதிரடி திரைப்படங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர் யானை திரைப்படம் போன்று குடும்ப படங்களையும் ரசிக்கின்றனர். சினம் திரைப்படம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஒரு தருணத்தில் கோபத்தின் உச்ச நிலைக்கு செல்வார்கள். அதேபோன்று ஒரு காவலரின் வாழ்க்கையில் அவரது சினத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட உண்மை கதை என்றார். மேலும் சினம் திரைப்படம் என்பது நமது சமுதாயத்தில் நடந்து வரும் சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்டது என்று கூறினார். சினம் படத்தின் நடிகை பலக் லல்வானி வேறு மாநிலத்தில் இருந்து வந்தாலும் தமிழை புரிந்து, அழகாக தமிழ் சொற்களை உச்சரித்து நடித்துள்ளார் என்றார்.
சினம் படத்தின் கதாநாயகி பலக் லல்வானி கூறுகையில், நடிகர் அருண் விஜய் உடன் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைந்த உதவும், நிச்சயம் சினம் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.
படத்தின் துணை நடிகர் காளி வெங்கட் கூறுகையில், சினம் திரைப்படத்தில் காவலராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது மக்கள் தங்களை அவர்களில் ஒருவராக நினைத்து மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.