தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் யோதா எனும் இந்திப் படத்தில் இணைந்துள்ளார்.


இது குறித்து ராஷி கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், யோதா திரைப்படத்தில் இணைகிறேன் என்பதை மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் அறிவிக்கிறேன். நவம்பர் 11, 2022ல் திரையில் உங்களை சந்திக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.






முன்னதாக இது குறித்து நடிகர் சித்தார்த் கூறுகையில், யோதா படத்தில் இரண்டு முக்கிய பெண் கதாபாத்திரங்களில் திஷா பத்தானியும், ராஷி கண்ணாவும் இணைகின்றனர். தயாராக இருங்கள். நாங்கள் நவம்பர் 11, 2022ல் உங்களைத் திரையரங்குகளில் சந்திக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.


இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. சஷான்க் கேய்தானின் மென்ட்டார் டிஸிப்ளின் இணைந்து தயாரிக்கிறது. 


இந்தப் படம் விமானத்தில் நடப்பதுபோல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. கரண் ஜோஹர் பேனரில் உருவாகும் முதல் ஆக்‌ஷன் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ராணுவ வீரராக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்கியது. தற்போது படக்குழுவில் திஷா பத்தானி, ராஷி கண்ணா இணைந்துள்ளனர்.


துள்ளலான நடிகை ராஷி..


ராஷி கண்ணாவின் சமூக வலைத்தள பக்கங்களில் , நெட்டிசன் ஒருவர் “ நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? ,அல்லது யாரையாவது டேட்டிங் செய்து வருகிறீர்களா ? “ என்ற கேள்வியை கேட்க , அதற்கு பதிலளித்த ராஷி கண்ணா “நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி காதலித்தால் அதை உங்களுக்கு  முன் கூட்டியே சொல்லிவிடுகிறேன் “ என தெரிவித்தார்.




அதே போல வருங்கால கணவர் குறித்த எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து கேட்ட ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ராஷி கண்ணா “ எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ அதெல்லாம் முக்கியமல்ல ஆனால் அவர்  ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.” என பளீச் பதிலளித்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் ராஷி கண்ணா செய்த உதவிகள் அவர் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதையையே ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


தமிழில் இவர் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.