என் இசை வாழ்வில் நான் மிஸ் பண்ண படம் இறுதிச்சுற்று என்று கூறியுள்ளார் தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷ்.


ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜி.வி.பிரகாஷ், "நானும் சுதாவும் நல்ல நண்பர்கள். ஒரு அக்கா தம்பி பாசம் எங்களுக்கு இடையே உண்டு. ஆனால் நாங்கள் இருவருமே பயங்கரமாக சண்டை போட்டுக் கொள்வோம். நான் ரஹ்மான் சார்கிட்ட அசிஸ்டென்ட்டாக இருந்தபோது சுதா கொங்கரா மணிரத்னம் சார் கிட்ட உதவியாளராக இருந்தார்.


அப்போது அவர் இறுதிச்சுற்று படம் பண்ணார். என்னிடம் அவர் இந்தப் படத்திற்கு நீ மியூசிக் பண்ணு என்றார். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் சுதாவிடம் அதற்கு ரீசனும் சொன்னேன். சுதா நீயும் நானும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். ஆனாலும் எதுக்கெடுத்தாலும் அடித்துக் கொள்கிறோம். அப்படி இருக்கும்போது நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணா அவ்வளவுதான் ரொம்ப அடிச்சிப்போம். இந்த ரிலேஷன்ஷிபல் எந்தப் பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்வோம் என்று சொன்னேன். அவரும் புரிந்து கொண்டார்.


அப்புறம் தான் சூரரைப் போற்று படம் பண்ணோம். அப்பவும், முதலில் எல்லாம் பேசிவிட்டு சுதா என்னிடம் ஃபோன் செய்தார். நீ நிறைய படங்கள் நடிக்கிறியாமே என்று கேட்டார். எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது. நான் படம் பண்ணுவதெல்லாம் வேற. நான் என்றாவது உன்னிடம் ஏதாவது வாக்கு கொடுத்துவிட்டு அதை செய்யாமல் இருந்திருக்கேனா என்றேன். உடனே சுதா.. சரி, நீயே இந்தப் படத்திற்கு மியூசிக் பண்ணு என்றார். அப்படித்தான் சூரரைப் போற்று நாங்க ரெண்டு பேரும் பண்ணோம்.





அவங்க சூட்டிங் போவதற்கு முன்னதாகவே எல்லா பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டேன். அதைப் பார்த்து சூர்யா சார் எனக்கு ஒரு பரிசும், கேக்கும் அனுப்பினார். என் நடிப்பு வாழ்வில் முதன்முறையாக ஒரு இசையமைப்பாளர் நான் படத்திற்கான சூட்டிங்கை ஆரம்பிக்கும் முன்னரே பாடல்களைக் கொடுத்திருக்கிறார் என்று பாராட்டி வாழ்த்துச் செய்தியும் அனுப்பியிருந்தார்.


என்னை நடிகனாக செதுக்கியவர் பாலா சார் தான்..


நான் நிறைய படங்கள் நடித்துள்ளேன். என்னை நடிகராக செதுக்கியவர் பாலா சார் தான். சிவப்பு மஞ்சள் பச்சை நான் பண்ண ஃபேமிலி என்டெர்டெய்னர். அதில் நானும் மாதவன் சாரும் நடிப்பதாக இருந்தது. அப்புறம் தான் அந்தப் படத்தில் சித்தார்த் ஒப்பந்தமானார். எங்கள் கூட்டணி நல்லா ஒர்க் அவுட் ஆனது.


நாச்சியார் தான் என் லைஃபில் ஒரு கேம் சேஞ்சர். ஒரு நடிகருக்கு தேவையான கண்ணோட்டம், பாடி லேங்குவேஜ் எல்லாத்தையும் பாலா சார் கிட்ட தான் கத்துக்கிட்டேன். நாச்சியார் படத்தில் காத்து என்ற அந்த கேரக்டராகவே என்னை பாலா சார் வாழச் செய்திருப்பார். என்றென்றும் நான் பாலா சாருக்கு கடைமைப் பட்டிருக்கிறேன்.


இவ்வாறு ஜிவி பிரகாஷ் பேசியிருந்தார்.