கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்த சிறுவன் ஒருவன் ஒரு முழு பாக்கெட் சிகரெட்டை புகைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத் ராஜேந்திர நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் அண்மையில் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துள்ளான். படத்தில் ராக்கிபாயாக வரும் யஷ் திரையில் அடிக்கடி சிகரெட் பிடிப்பதை பார்த்த அந்த சிறுவன் தானும் அதே போல செய்ய வேண்டும் என்று எண்ணி முதன்முறையாக சிகரெட் பிடிக்க ஆரம்பித்திருக்கிறான்.



                                                                         


 


தொடர்ந்து சிகரெட் பிடித்த அந்த சிறுவன் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்திருக்கிறார். இவ்வளவு சிகரெட்டை புகைத்ததால் அவனுக்கு கடுமையான இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவனுக்கு சிகிச்சை அளிகப்பட்டு வருகிறது.


மருத்துவர் பேட்டி 


இது குறித்து மருத்துவர் ரோகித் ரெட்டி பேசும் போது,  “இளம் வயதினர் ராக்கி பாய் போன்ற கதாபாத்திரங்களால் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்கள். இதோ இந்த சிறுவன் இந்தப்படத்தை பார்த்து சிகரெட் பிடிக்க ஆரம்பித்து ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்து இருக்கிறான். இதனால் தற்போது நோய்வாய் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். சினிமா சமுதாயத்தை பெரிதும் பாதிக்கும் விஷயமாக இருக்கிறது. அதனால் படத்தில் இது போன்ற விஷயங்களை சினிமா நடிகர்களும் இயக்குநர்களும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.    



                                                                   


 


முன்னதாக பாகுபலி பாகம் 1 வசூலித்த மொத்த வசூலை படம் வெளியான 7 நாட்களில் கே.ஜி.எப் 2 திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. அதனைத்தொடர்ந்து இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் வசுலித்த தொகையை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.


19 வயது எடிட்டர்


இந்தப்படத்தில் யஷ்ஷூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது


மருத்துவர் சொல்வது போல் இப்படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் சற்று அதிகமாகவே இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.