பிரபல நடிகை சமந்தாவும் நாக சைத்தன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டதும், அதன்  பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டதும் நாம் அறிந்ததே. சமந்தா - நாக சைத்தன்யா தம்பதிகள் இருவரும் ஒரே மாதிரியான அறிவிப்பை அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் விவகாரத்துக்கு பிறகு நாக சைதன்யாவை விட சமந்தா பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அது குறித்து வெளிப்படையாக பதிவிட்ட சமந்தா தன்னை குறித்து வரும் வதந்திகள் ஒருபோதும் என்னை வீழ்த்தாது என்பது போன்ற விளக்கத்தையும் கொடுத்திருந்தார். ஆனாலும் சமந்தா விவாகரத்து தொடர்பான செய்திகளும் , அதற்காக காரணம் இதுதான் என கூறி சில யூடியூப் நிறுவனங்கள் தொடர்ந்து செய்திகளை பரப்பி வந்தனர். 







இது குறித்து அறிந்த சமந்தா, ”இனிமேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த சேனல்களின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். குறிப்பாக தெலுங்கில் சுமன் டிவி, தெலுங்கு பாப்புலர் டிவி உள்ளிட்ட இன்னும் சில யூடியூப் சேனல்கள், சில யூடியூப் நிறுவனங்கள் மீது அவர் மானநஷ்ட வழக்கை தொடர்ந்துள்ளார்.மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர், சமந்தாவின் திருமண வாழ்க்கை குறித்தும் அவருக்கு ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருந்ததாக மிகவும்  தவறாக பேசியதாக கூறி அவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்







இந்த வழக்கு நேற்று ஐதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ”வழக்கு தொடர்ந்ததற்கு பதிலாக , சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களை மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கலாமே” என அறிவுரை கூறியுள்ளார்.பிரபலங்கள் பொதுதளங்களில் தங்களின் விவரங்களை பகிர்ந்த பின்னர்தான் இது போன்ற வழக்குகளை தொடர்கிறார்கள் என அதிருப்தி தெரிவித்துள்ளார்.


பின்னர் சமந்தா தரப்பு வழக்கறிஞர் சில காரணங்களை தெரிவித்து மனுவின் மீதான விசாரணையை விரைந்து முடிக்க நீதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான் , உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடல்லாம் கிடையாது.’ என தெரிவித்துள்ளார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமந்தா தற்போது  மன அமைதி வேண்டி , வட இந்தியாவின் முக்கிய பகுதிகளில்  ஆன்மீக யாத்திரையில் ஈடுபட்டிருந்தார், அங்குள்ள புனித தளங்களுக்கு விசிட் அடித்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.