சூப்பர் ஸ்டார் நடித்த "காலா" திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் காதலியாகவும், "வலிமை" திரைப்படத்தில் நடிகர் அஜித் ஜோடியாகவும் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தனது காதலருடன் பிரேக் அப் செய்தது தான் தற்போதய பாலிவுட் ஹாட் நியூஸ்.


 



டேட்டிங் முடிவுக்கு வந்தது :


திரைப்படத் தயாரிப்பாளர் முடாசர் அஜீஸும் நடிகை ஹுமா குரேஷியும் கடந்த மூன்று ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த நிலையில் தற்போது அவர்களது உறவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்வதற்கு இனி வாய்ப்பே இல்லை என தெரிவிக்கின்றனர் நெருங்கிய வட்டாரங்கள். இவர்கள் இருவரின் பிரிவிற்கு என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும் இருவரும் இன்று போல என்றும் நண்பர்களாக இணைந்து படங்களை தயாரிப்பார்கள் என தெரிகிறது. முடாசர் அஜீஸ் மற்றும் ஹூமா குரேஷி இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தான் டபுள் XL. சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 4ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதில் ஹூமா குரேஷியுடன் இணைந்து சோனாக்ஷி சின்ஹா, ஜாகீர் இக்பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். 


 






 


வைரலான டேட்டிங் போட்டோஸ் : 


2019ம் ஆண்டு இவர்கள் இருவரும் சேர்ந்து டேட்டிங் செய்து வந்த விவரம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோஸ் மூலம் தான் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஜோடியாக பல முறை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர், விடுமுறையை கழித்துள்ளனர் என்றாலும் இவர்கள் உறவு குறித்து மௌனமாகவே இருந்து வந்துள்ளனர். இது குறித்து ஹூமா குரேஷியிடம் கேட்டதற்கு " எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் பேச விரும்பவில்லை" என பதிலளித்துள்ளார். ஹூமா குரேஷி மற்றும் முடாசர் அஜீஸ் இருவரின் பிரிவு தான் தற்போது பாலிவுட்டின் ஹாட் நியூஸ்.
 
முடாசர் அஜீஸ் ஏற்கனவே பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இருவரும்  காதலித்து டேட்டிங் செய்து வந்த நிலையில் 2010 ஆண்டு இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.