பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பகிர்ந்த இன்ஸ்டா போட்டோ பல்வேறு கேள்விகளை கிளப்பிய நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். பால்கனியில் தன்னுடைய தாய் நின்றுகொண்டிருக்கையில்  வீட்டுக்குள் அமர்ந்திருக்கும்ஹ்ரித்திக் ரோஷன் புகைப்படம் எடுத்தார். அது குறித்து பதிவிட்ட அவர், ஒரு சோம்பலான ஞாயிறு காலை. இந்த ஞாயிற்றுக்கிழமைக்கு புதன் கிழமையே ஒகேதான் என்று தோன்றுகிறது. நான் போய், என் அம்மாவை தழுவப்போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.  




அவருடைய பதிவுக்கு பலரும் வித்தியாசமான பதில் அளித்தனர். அதில் சிலர் அந்த புகைப்படத்தில் இருக்கும் வீட்டை கவனித்து பதிவிட்டுள்ளனர். அந்த வீட்டின் சுவர் சற்று பாதிப்படைந்து இருந்தது. அது குறித்து பதிவிட்ட சிலர் உங்கள் வீட்டின் சுவர் பாதிப்படைந்துள்ளது.  பாதுகாப்பாக இருக்கவும் என்றும், உங்கள் வீடு ஏன் இப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். அதனைக் கடந்து போகாமல் ரசிகரின் கேள்விக்கு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். 


அதில், இப்போது நாங்கள் இருக்கும் வீடு வாடகை வீடு. விரைவில் எங்கள் சொந்த வீட்டுக்கு செல்லவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.


வெளியான தகவலின்படி,  ஹ்ரித்திக் ரோஷன் ரூ.100 கோடி மதிப்பிலான புது வீட்டுக்கு விரைவில் குடியேற உள்ளார். வரும் அக்டோபர் மாதம் தன் குடும்பத்துடன் ஹ்ரித்திக் ரோஷன் அங்கு குடியேறுவார் எனத் தெரிகிறது. காற்றில் மிதக்கும் வீடு என்ற அடைமொழி கொண்ட சொகுசு பங்களாவை  டியூப்லக்ஸ் குடியிருப்பில் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 மாடிகளையும்  அவர் வாங்கியுள்ளார். 


தற்போது ஹ்ரித்திக் ரோஷன் குடியிருக்கும் வீடு மாத வாடகை என்றும், மாதத்துக்கு  ரூ.8.25 லட்சம் வாடகை கொடுத்து அவர் தங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.