பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுவுக்கு அடிமையாகி, பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறி அதில் இருந்து வெளியே வந்தார். அந்தத் தருணங்கள் பற்றி அவர் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “ என்னுடைய அம்மாதான் எனக்கு பெரிய பலமாக இருந்தார். அவர் திடீரென்று மறைந்த போது அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் உருவானது. அப்போது நான் வருத்தத்தில் இருந்தேன்.
மருத்துவமனையின் படுக்கையில் அவரது உயிர் பிரிந்தது. அவர் உயிர் பிரிந்த போது, அவரது கை அப்படியே கீழே விழுந்தது. அப்போதுதான் எனக்கு உடலில் ஆன்மா எங்கிருக்கிறது. அது யாரிடம் செல்கிறது போன்ற கேள்விகள் எழத் தொடங்கின. அந்தத் தேடல்தான் என்னை இஸ்லாம் மதத்தை நோக்கி அழைத்துச் சென்றது. அந்தப் பயணத்தில்தான் நான் அந்த டார்க் சோனுக்குள் சென்றேன். இது யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஆனால் அதை எப்படி பாசிடிவாக மாற்றி வெளியே வருகிறோம் என்பதே இங்கு முக்கியமானது.
அந்த சமயத்தில் ஆல்கஹாலை குடிக்கும் போது, எனக்குத் தெரியும் இது நான் இல்லை என்பது. அப்போது என்னை நான் ஒரு மூன்றாவது நபராகத்தான் பார்த்தேன்.
ஆனால் அப்போதே எனக்குத் தெரியும் நான் இதிலிருந்து வெளியே வந்துவிடுவேன். அந்த சமயத்தில் நான் எந்தப் படங்களிலும் கமிட் ஆக வில்லை என்றார்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்