சினிமாத்துறைக்குள் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு சிவகார்த்தியேன் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். 


இது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “ முதலில் நான் சினிமாதுறைக்குள் நுழைய விரும்பும் நபரிடம் என்ன காரணத்திற்காக சினிமாவிற்குள் நுழைய நினைக்கிறீர்கள் என்று கேட்பேன். அதற்கு காரணம் அவர்களுக்கு இந்த சினிமா துறைக்குள் நுழைய என்ன டிரைவ் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக.. அது பணம், புகழ் அல்லது தன்னுடைய  திறமையை வெளிப்படுத்துவது என எதுவானாலும் இருக்கலாம். என்னை இந்த சினிமாத்துறைக்குள் வரத்தூண்டியது நான் கல்லூரியில் எனது திறமைகளை வெளிப்படுத்தும் போது கிடைத்த சத்தமும் கைத்தட்டலும்தான்.


 






இந்த சினிமாதுறைக்குள் நுழைய இதைத்தாண்டி சகிப்புத்தன்மையும், பொறுமையும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது இருந்தது என்றால் என்றாவது ஒரு நாள் நீங்கள் வெற்றியை ருசித்து விடலாம். சினிமாத்துறையை பொருத்தவரை லக்கை தனியாக எடுத்து வைத்து விடலாம். ஏற்றுக்கொள்ளுதல் மிகவும் அவசியமான ஒன்று. எப்படி நாம் நமது வெற்றியை ஒப்புக்கொள்கிறோமோ, அதே போல நமது தோல்வியையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதே சமயம் மற்றவர்களின் வெற்றியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் செய்யும் போது உங்களின் திட்டமிடல் மற்றும் வியூகம் தானாகவே மாறும்" என்று பேசியிருக்கிறார்.  


தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான ஃபேவரைட் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து இந்த படமும் வசூலில் ரூ.100 கோடியை எட்டியதால் ரசிகர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். 


 






இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகி வருகிறது. சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இது உருவாவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில்  ‘பிரின்ஸ்’படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.