இந்தியாவின் பிரபலமான பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர். லதா ஜி என அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தமிழில் வளையோசை கலகலவென உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.   


லதா மங்கேஷ்வர் மறைந்தார்


மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 92. பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




இந்த நிலையில் கமல், அமலா நடித்த  ‘சத்யா’  படத்தில் லதா ஜி பாடிய வளையோசை கலகலவென பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இது குறித்து  ஜூ தமிழில் ஒளிப்பரப்பான இசைக் கச்சேரி ஒன்றி இளையராஜா பேசும் போது,  “கமலிடம் என்னிம் ஒரு பீஸ் இருக்கிறது. அதை நான் இன்னும் ரெக்கார்டு செய்யவில்லை என்றேன். 
உடனே என்ன அது என்றார் கமல்.. உடனே நான் இந்த பீஸை வாசித்து காண்பித்தேன்.


உடனே இதை பாட்டாக போட்டு விடலாமே என்றார். உடனே நான் இந்த பாட்டை பாட பாடகி லதாஜிதான் வேண்டும் என்றேன். அதற்கு உடனே கமல் ஏற்பாடு செய்ய லதா ஜி வந்தார். பாட்டு எழுத வாலியும் வந்தார்.


கூனிக்குறுகிய லதா ஜி


வாலிக்கு நான் டியூனை விளக்கினேன். டியூனை கேட்டு விட்டு அவர் என்னய்யா இது? என்றார். உடனே அண்ணா இந்தப் பாடலை லதா ஜி பாடுகிறார். அவர் பாடுவதற்கு ஏதுவாக, இரட்டைக்கிளவியில் வரிகளை எழுதிக்கொடுங்கள் என்றேன். உடனே அவர் “வளையோசை கலகலவென.. பாடலை எழுதினார். பாடலை லதா ஜிக்கு சொல்லிக்கொடுத்தால் அவருக்கு உடலெல்லாம் நடுங்குகிறது. பாடி,  ரெக்கார்டிங் முடித்துவிட்டு வெளியே வந்தால், பாடல் வரிகள் போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் லதா ஜிக்கு உடலெல்லாம் கூனி குறுகி போய் விட்டது.” இவ்வாறு இளையராஜா பேசினார்.