திரைக்கதை , வசனம் , இயக்கம் பாக்கியராஜ் என அடுத்தடுத்து மத்தியில்  நடிகராகவும்  வெளியான திரைப்படங்களுக்கு மத்தியில் இசையமைப்பாளராகவும் பாக்கியராஜ்  களமிறங்கிய திரைப்படம்தான் ‘இது நம்ம ஆளு ‘.  என்னது பாக்கியராஜ் இசையமைச்சிருக்காரா என சிலர் ஷாக் ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது.  ஆனால் அவர் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே செம ஹிட் , இன்றளவும் பலரின் விருப்ப தேர்வுகளில் ஒன்றாகத்தான் இருக்கிறது.1988 ஆம் ஆண்டு வெளியான  இது நம்ம ஆளு திரைப்படத்தின் , “அம்மாடி...இதுதான் காதலா “ ,  “ நான் ஆளான தாமரை “ , “சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும் “ என படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர்  ஹிட். குறிப்பாக நான் ஆளான தமாரை பாடல் இப்போதும் ஏதாவது ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டுதானே இருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாடல்களுக்கு பின்னால் இருப்பவர் இசையமைப்பாளர் பாக்கியராஜ்தான்.  ஆனால் பாக்கியராஜ் இசையமைப்பதற்கு பின்னால் சில காரணங்கள் இருக்கிறது. அதாவது படம் வெளியான சமயங்களில் , இளையராஜாவிற்கும் பாக்கியராஜிற்கும் மோதல் இருந்ததாகவும்,  இப்போதெல்லாம் எல்லாரும் ஆர்மோனிய பெட்டியை  தொட்டுவிடுகிறார்கள் என  இளையராஜா சாடியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார் பாக்கியராஜ். 




”இளையராஜா சின்ன வீடு படம் வரையில் என்னுடைய படங்களுக்கு இசையமைத்துக்கொண்டுதான் இருந்தார். அடுத்து என்ன படம் என்பதை முன்கூட்டியே சொல்லும்படி கேட்பார். நானும் ஸ்கிரிப்ட் தயார் ஆனதும் முன்கூட்டியே சொல்லுவேன்.அடுத்த ஸ்கிரிப்டை எடுத்துக்கிட்டு அவரோட ஸ்டூடியோ போயிருந்தேன். அப்போ அவர் ரெக்கார்டிங்ல இருக்குறதா அவரது உதவியாளார் சொன்னார். மேலும் நீங்க சார, வீட்டுக்கு போய் பாருங்கள் என்றார். உடனே நான் ஏன் வீட்டிற்கு போக வேண்டும் , நான் எப்போதும் அவரை இங்கு வந்து பார்ப்பதுதானே வழக்கம் . என்றேன் . இல்லை இல்லை எல்லோரும் வீட்டுக்கு வந்துதான் பார்க்குறாங்க என்றார் அவர் .  நீங்கள் சொல்வது புதிதாக உள்ளது, நான் வந்து போனதா அவரிடம் சொல்லுங்கள் , தேவைப்பட்டா நான் பார்க்கிறேன் என்றேன். " அதன் பிறகு இளையராஜாவிடன் இருந்து அழைப்பும் வரவில்லை. நான் பொதுவாக சிறு வயதில்  கேரம் போர்ட் விளையாடும் பொழுது , மேடை கச்சேரிகளை பார்த்துதான் வளர்ந்தேன். அந்த சமயத்தில் நான் இசையை கற்றுக்கொண்டிருந்தால்  இப்படியான அவமானங்களை சந்தித்திருக்க வேண்டியதில்லையே என தோன்றியது. அதன் பிறகு இப்போதும் ஒன்னும் இல்லை கற்றுகொள்ளலாம் என சுதாகர் மாஸ்டரிடம் இசையை கற்றுக்கொண்டு, இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்தேன்.” என  பின்னணியின் சுவாரஸ்யத்தை தெரிவித்துள்ளார் பாக்கியராஜ்.