ப்ளாக் பாந்தர் படத்தின் நடிகர் டெனொச் ஹுர்டா தன்மீது மேல் வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு எலெனா ரியோஸ் என்கிற சமூக செயற்பாட்டாளர் ஹாலிவுட் நடிகர் டெனோச் ஹுர்டா தன்மேல் பாலியல் முறைகேடு செய்ததாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பாலியல் ரீதியாக மட்டுமில்லாம மன ரீதியாகவும் தன்னை டெனோச் ஹுர்டா துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டியிருந்தார் ரியோஸ். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது.


இது தொடர்பாக பேசிய எலெனா கூடுதலாக தகவல்களை பகிர்ந்துகொண்டபோது “ அனைவரும் கொண்டாடும் ஒரு திரைப்படத்தின் நடிகரின் மேல் இப்படியான குற்றச்சாட்டுகளை ஒரு கூறினார் என்றால் அதை யாரும் எளிதில் நம்பமாட்டார்கள். ஹுர்டா மிக வசீகரமான ஒருவர் அதனை தனது பக்கபலமாகக் கொண்டு அவர் குற்றங்களில் இருந்த சாமர்த்தியமாக தப்பித்துக்கொள்ளவும் வழிவகுக்கிறது “ எனக் கூறியுள்ளார்.


டெனோச் ஹுர்டா மறுப்பு


இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தெரிவிக்காத செனொச் தற்போது தனது மெளனத்தைக் கலைத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் முற்றிலும் பொய்யாக என்மேல் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு காட்டுத்தீப்போல் பரவியிருக்கிறது. இதற்கு மேலும் என்னுடைய எதிர்ப்பை நான் தெரிவிக்காமல் இருக்கப் போவதில்லை.” என பதிவிட்டுள்ளார் ஹுர்டா.


தொடர்ந்து ”எலெனாவும் தானும் ஓராண்டு காலமாகவே  காதலித்து வந்ததாகவும் . இந்த காலத்தில் தங்களுக்கு இடையில் நடந்த அனைத்தும் முழு சம்மதத்துடன் மட்டுமே நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்”.  ”ஒருவருக்கொருவர் ஆதரவளித்த ஒரு அழகான உறவு எங்களுக்குடையில் இருந்து வந்தது. ஆனால் எங்களுக்கு இடையிலான உறவு முடிந்த பின்னர் எலெனா எங்களது நண்பர்கள் மத்தியிலும் பொது இடங்களிலும் தவறாகப் பேசத் தொடங்கினார்.” என தன் தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளார்.


மேலும் தன் மீது பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க, தான் ஒரு அதிகாரப்பூர்வமான குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் இத்தகைய குற்றச்சாட்டுகள் தனக்கும், தனது வேலைக்கும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இவற்றை சட்டரீதியாக எதிர்கொள்வது அவசியமாகிறது என்றும் அவர் கூறினார். மேலும் தான் பிழையற்ற மனிதன் இல்லை என்றாலும், தன்மீதான இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது அதனை மறுக்கவேண்டியது தனது கடமை என்றும் தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேற மட்டுமே தான் முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார் ப்ளாக் பாந்தர்  நடிகர் டெனோச் ஹுர்டா.