சில்வெஸ்டர் ஸ்டாலோன்


ஹாலிவுட் சினிமாவிற்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்று ராக்கி. சில்வெஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடித்த இந்தப் பட வரிசைக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குத்துச் சண்டையை மையமாக வைத்து வெளியானப் படங்களில் கமர்ஷியல் ரீதியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரு படமாக இன்றுவரை ராக்கி படம் இருக்கிறது.  இன்று  மார்வெல் வெளியிடும் சூப்பர்ஹீரோ படங்களைப் போல் அடுத்தடுத்து ஐந்து பாகங்கள் வெளியாகி தொடர் வெற்றிகளைக் கண்டது ராக்கி பட வரிசை. இந்தப் படங்களின் மூலம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடம் என்றென்றைக்குமான இடத்தை பிடித்துள்ளார் சில்வெஸ்டர் ஸ்டாலோன். 

Continues below advertisement


50 லட்சம் மதிப்புள்ள கைகடிகாரம்:


தன்னிடம் உள்ள அரிய வகை கடிகாரங்களை சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஏலத்தில் விட இருப்பதாக தெரிவித்துள்ளார். பழமையான பொருட்களை சேகரித்து வரும் பிரபல நிறுவனமான சோத்பை என்கிற நிறுவனம் இந்த கடிகாரங்களை ஏலத்தில் விட இருக்கிறது. தன்னிடம் உள்ள 11 அரிய வகை கைக்கடிகாரங்களை இந்த ஏலத்தில் விற்க இருக்கிறார் சில்வெஸ்டர் ஸ்டாலோன்.


இதில் அதிகம் மிக முக்கியமாக Patek Phillipe Grandmaster Chime என்கிற அரிய கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலகத்தில் மிக சிறப்பான ஒரு இயங்குமுறையைக் கொண்ட கடிகாரம் என்று கருதப்படும் இந்த கைகடிகாரம் 1927 ஆம் ஆண்டு ஹென்ரி க்ரேவ்ஸ் என்பரின் தலைமையில் உருவானது. இதுவரை மொத்தம் 7  Grandmaster Chime கடிகாரங்கள் மட்டுமே உருவாக்கப் பட்டிருக்கின்றன. 






அதில் ஒன்று சில்வெஸ்டர் ஸ்டாலோனிடம் இத்தனை ஆண்டுகள் இருந்தது வெளி உலகத்திற்கு தெரிந்திருக்கவில்லை. பல முக்கிய நபர்களிடம் சிபாரிசு கடிதம் வாங்கி தான் இந்த கடிகாரத்தை தனக்கு சொந்தமாக்கியதாக சில்வெஸ்டர் ஸ்டாலோன் தெரிவித்துள்ளார். இந்த ஒரு கடிகாரம் மட்டுமே 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தவிர்த்து தான் நடித்த படங்களில் அணிந்த கடிகாரங்களையும் ஏலத்தில் விட இருக்கிறார் சில்வெஸ்டர் ஸ்டாலோன். வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி இந்த ஏலம் அமெரிக்கா நியூயார்க் நகரத்தில் நடைபெற இருக்கிறது.