ஹிப் ஹாப் தமிழா, அவரின் ட்விட்டர் பக்கத்தில் புதிய மியூசிக் வீடியோ கூடிய விரைவில் வெளியாகும் என பதிவிட்டுள்ளார். இதனால், துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள காசேதான் கடவுளடா பாடலை ஹிப்ஹாப் தமிழா பாடியுள்ளார் என்று கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுவயதிலிருந்து ராப் பாடல் மீது ஆர்வம் கொண்ட ஆதி, தொடர்ந்து பாடல்களை பாடி முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அதில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போது பாடிய “ க்ளப்பு ல மப்பு ல” என்ற பாடல், பயங்கர ஹிட் ஆனது. ரேடியோ மிர்ச்சியில் மா கா பா ஆனந்த இருந்த போது, இப்பாடலை பாட, ஆதிக்கு வாய்ப்பு கொடுத்தார்.
பின், வாடி புள்ள வாடி என்ற ஆல்பம் பாடலும் செம ஹிட்டானது. நான் படத்தில், “தப்பெல்லாம் தப்பே இல்லை” என்பது இவருக்கு முதல் பாடலாக அமைந்தது. அதைதொடர்ந்து அனிருத்தின் இசையில் எதிர் நீச்சலின் டைட்டில் ட்ராக்கையும் , வணக்கம் சென்னை படத்தில் வரும் “சென்னை சிட்டி கேங்ஸ்டா” பாடலையும் கத்தி படத்தில் வரும் “பக்கம் வந்து” பாடலை பாடினார்.
அதன் பின், ஆம்பள, இன்று நேற்று ஆகிய இரு படங்களுக்கும் இசையமைத்தார். இசையமைப்பாளராக இருந்தவர் இயக்குநராக அவதாரம் எடுத்து, “மீசைய முறுக்கு”, “நட்பே துணை”, “ நான் சிரித்தால்”, “சிவகுமாரின் சபதம்”, “அன்பறிவு”ஆகிய படங்களை இயக்கினார். இதில் ஒரு சில படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும், மீதம் உள்ள படங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
தற்போது, மீண்டும் சூப்பர் கம்-பேக் கொடுக்கும் வகையில், புதிய மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகும் என ட்வீட் மூலம் அறிவித்துள்ளார். இந்த பதிவில் மக்கள், “ பழைய ஹிப் ஹாப் ஆதியா திரும்பா வாங்க அண்ணா”, “ஒரு வேள துணிவா இருக்குமோ”, “ காசேதான் கடவுளடா பாட்டை இவருதான் பாடி இருப்பாரோ” என்றேல்லாம் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ஆனால், அவர் வெளியிட்ட அந்த 10 செகண்ட் வீடியோவில், “நடந்த வரைக்குமே” என்று மட்டும்தான் கேட்கிறது. இதனால், அவர் வாழ்க்கை கதையை பாடலாக பாடியிருக்கலாம் என்பது சிலரின் கூற்றாக இருக்கிறது.