அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த கோயில் கட்டப்படுவதற்கு எந்தெந்த நட்சத்திரம் எவ்வளவு தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


ராமர் கோயில் திறப்பு


அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது.  குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு  விடப்பட்டுள்ளன. 


 நன்கொடை வழங்கிய பிரபலங்கள்


அயோத்தி ராமர் கோயில் உருவாவதற்காக பல்வேறு நடிகர்கள் கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள். தற்போது எந்த நடிகர் எவ்வளவு தொகையை அயோத்தி கோயில் கட்டுமானத்திற்கு கொடுத்துள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடிகர்களின் பட்டியலைப் பார்க்கலாம்


அக்‌ஷய் குமார்


பாலிவுட் நடிகர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொடர்ச்சியாக தனது ஆதரவைத் தெரிவித்து வரும் நடிகர்களில் ஒருவர். ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடை வழங்கியதாக முன்னதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் எவ்வளவு தொகை என்பதை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை,


பவன் கல்யாண்


 தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாண்  சுமார் 30 கோடிகள் வரை அக்‌ஷய் குமார் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடையாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


அனுபம் கெர்






பாலிவுட்டின் மூத்த நடிகர்களில் ஒருவரான அனுபம் கெர் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு தேவையான செங்கல்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


பிரனீதா 






சகுனி, மாஸ் உள்ளிட்டப் படங்களில் கதாநாயகியாக நடித்த பிரனீதா செளதரி ராமர் கோயிலுக்கு ரூ.ஒரு லட்சம் நன்கொடையாக வழங்குவதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.


நடிகை ஹேமா மாலினி, குர்மீத் செளதரி உள்ளிட்டவர்களும் பெரும் தொகைகளை ராமர் கோயிலின் கட்டுமானத்திற்காக நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.