சினிமா மீதான கண்ணோட்டம் என்பது மாறிவிட்டது. தாய்மொழி படங்கள் மட்டுமல்லாமல் மொழி புரியாவிட்டாலும் கூட உலக படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக சர்வதேச திரைப்பட விழாக்களும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலிவுட்டில் வெளியான சிறந்த 8  த்ரில்லர் படங்களைப் பார்க்கலாம்.


ஜானே ஜான் (Jaane jaan)





கரீனா கபூர், விஜய் வர்மா, ஜைதீப் அஹ்லாவத் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜானே ஜான். சுஜோய் கோஷ் இந்த படத்தை இயக்கியிருந்தார். நீண்ட நாட்களாக கரீனா கபூரை ஒரு நல்ல கதாபாத்திரத்தில் பார்த்துவிட மாட்டோமா என்கிற ரசிகர்களின் எக்கத்தை இந்தப் படம் போக்கியிருக்கிறது என்று சொல்லலாம்.
கடந்த 2005 ஆம் ஜப்பானிய மொழியில் வெளியான ஒரு நாவலை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


தலாஷ் Talaash





இதே வரிசையில் கரீனா கபூர் நடித்துள்ள இன்னொரு படம் தலாஷ். கரீனா கபூர், ஆமிர் கான், ராணி முகர்ஜி நடித்துள்ளார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்தப் படம் இன்று ரசிகர்களால் அதிகம் பாராட்டப்படுகிறது. மன அழுத்தம் நிறைந்த ஒரு காவலர் ஒரு மர்மத்தை கண்டுபிடிக்கும் கதையை விறுவிறுப்பான கதையாக சொல்கிறது.


ராத் அகேலி ஹே (Raat Akeli Hai)





நவாசுத்தீன் சித்திக் , ராதிகா ஆப்டே, ஸ்வேதா திரிபதி என திறமையான நடிகர்கள் இணைந்து நடித்தப் படம் ராத் அகேலி ஹே. மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களை இந்த படத்தில் பார்க்கலாம்.


பத்லா (Badla)




பிங்க் படத்தைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், டாப்ஸி பன்னு, இணைந்து நடித்த படம் பத்லா. ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. ஸ்பானிஷில் வெளியான தி இன்விசிபிள் கெஸ்ட் படத்தின் ரீமேக் செய்யப்பட்டது. ஜானே ஜான் படத்தை இயக்கிய சுஜய் கோஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.


கூஃபியா (khufiya)




தபூ நடித்து விஷால் பரத்வாஜ் இயக்கியிருக்கும் அடம் கூஃபியா. உளவாளிகளாக இருப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கும் வெறுமையை ஒரு த்ரில்லராக சொல்லும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது.


தோபாரா (Dobbara)




அனுராக் கஷ்யப் சமீபத்திய ஆண்டுகளில் இயக்கிய நல்ல பாராட்டுக்களைப் பெற்ற படம். டைம் டிராவல் மற்றும் இரு அம்சங்களை ஒன்றாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்பானிய மொழியில் வந்த தி மிராஜ் படத்தின் ரீமேக்.டாப்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


தல்வார் (Talvar)




2008ஆம் ஆண்டு நோய்டாவில் நடந்த ஆருஷி தல்வார் வழக்கிற்கு பின் மறைந்திருந்த பல்வேறு உண்மைகளை வைத்து உருவான படம். இர்ஃபான் கான் மற்றும் தபு நடித்திருந்தார்கள்.


ஹிட் (Hit)




2020ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஹிட் படம் பின் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ராஜ்குமார் ராவ் மற்றும் சான்யா மல்ஹோத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.




மேலும் படிக்க:Actor Suriya: சாப்பாடு ஊட்டி விட்டார்.. விஜயகாந்தைப் போல யாரும் இல்லை ; கண்ணீர் மல்க பேசிய நடிகர் சூர்யா