Lollu Sabha Seshu: ஒருபக்கம் இதயத்தில் வலி.. மறுபக்கம் சிரிப்பு.. ஷாக்காக வைத்த சேஷூவின் டெடிகேஷன்!

லொள்ளு சபா மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்களில் நடிகர் சேஷூவும் ஒருவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தபோதும் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார்.

Continues below advertisement

மறைந்த நடிகர் சேஷூ , ஒரு காமெடி காட்சியில் தான் கஷ்டப்பட்டு நடித்ததை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றி காணலாம். 

Continues below advertisement

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்களில் நடிகர் சேஷூவும் ஒருவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தபோதும் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். இப்படியான நிலையில் கடந்த 2007ம் ஆண்டு பத்ரி இயக்கத்தில் இயக்குநர் சுந்தர் சி.  ‘வீராப்பு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் கோபிகா, பிரகாஷ்ராஜ், விவேக், அஞ்சு, டெல்லி குமார், சந்தானம் என பலரும் நடித்திருந்தார்கள். டி.இமான் இசையமைத்த வீராப்பு படம் அந்த காலக்கட்டத்தில் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.  

வீராப்பு படத்தில் மறைந்த நடிகர் சேஷு கோடை இடி குமார் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் நடிகர் விவேக்கை கம்பில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள்.  அதன் ஒரு முனையை இவர் பிடித்துக் கொண்டு ஆட வேண்டும். பின்னணியில் தளபதி படத்தில் இடம் பெற்ற காட்டுக்குயிலே மனசுக்குள்ள பாட்டு ஒலிக்கும். அப்போது சேஷுவுக்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி இருந்துள்ளார். அதிலிருந்து மூன்றாவது நாளில் வீராப்பு படத்தின் சூட்டிங் நடந்துள்ளது. அந்தக் காட்சியில் விவேக்கை தூக்கிக் கொண்டு ஆடும்போது சேஷூவுக்குள் உள்ளுக்குள் வலி இருக்கிறது.

ஆனால் வெளியில் சிரித்துக்கொண்டு நடித்துக் கொண்டிருந்துள்ளார். மழை பின்னணியில் அந்த காட்சி எடுக்கப்பட்ட  நிலையில் கட் சொல்லிவிட்டு மீண்டும் ஒருமுறை எடுக்கலாம் என இயக்குநர் சொல்லியுள்ளார். அப்போது விவேக் சார் மீது படிந்திருந்த மண்ணை அகற்றி கொண்டிருந்த நிலையில் சேஷூவுக்கு இதயத்தில் வலியாக இருந்துள்ளது. மீண்டும் அந்த காட்சி எடுக்கப்பட்டபோது மறுபடியும் தொடர்ந்து வலி எடுத்திருக்கிறது. காட்சி ஓகே ஆக வேண்டும் என்று சேஷூ சிரித்துக் கொண்டே நடித்துக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் சம்பந்தப்பட்ட காட்சியை எடுத்து முடித்ததும் ஓரமாக சென்று நெஞ்சை தடவி கொடுத்து வலியை போக்கிக் கொண்டார். அந்த கேரக்டர் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இப்படி பல துன்பங்களை கொண்டிருந்தாலும் திரையில் தோன்றும்போது மக்களை சிரிக்க வைத்தார் சேஷூ. ஆனால் இன்று அவர் இல்லாதது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு தான்.


மேலும் படிக்க: The Greatest of All Time: 31 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்தில் விஜயகாந்த்.. ஓகே சொன்ன பிரேமலதா!

Continues below advertisement
Sponsored Links by Taboola