Naga Chaitanya: ஷோபிதா பெயரைச் சொன்னதும்.. நேர்காணலில் ஒரே ரியாக்ஷன் கொடுத்து சிக்கிய நாக சைதன்யா!

ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நாக சைதன்யா சொகுசு பங்களா ஒன்றை கட்டியுள்ளார் என்றும் அங்கு ஷோபிதாவை அடிக்கடி பார்க்க முடிகிறது எனவும் கூறப்பட்டது.

Continues below advertisement

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின்னர் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என பலர் விலகிச் சென்றாலும் இந்த விவாகரத்து புகைந்துகொண்டே இருக்கிறது. 

Continues below advertisement

சமீபத்தில்கூட இது தொடர்பாக பேசிய நாக சைதன்யா, “ நான் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இந்த பதிலின் மூலம் அவர்களுக்கு இதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் விஷயத்தில் சமந்தாவும் அதில் இருந்து வெளியே வந்துவிட்டார். அதனால் இந்த உலகம் சொல்வதிற்கு தான் பதில் சொல்ல தேவையில்லை” என்று பேசியிருந்தார். இதற்கிடையே  பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா நெருக்கம் காட்டி வருவதாகவும் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் தகவல் பரவியது. 

ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நாக சைதன்யா சொகுசு பங்களா ஒன்றை கட்டியுள்ளார் என்றும் அங்கு ஷோபிதாவை அடிக்கடி பார்க்க முடிகிறது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில்தான், நேர்காணல் ஒன்றில் நாக சைதன்யாவுடன் ஷோபிதா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஷோபிதாவுடனான நட்புக்குறித்த கேள்வியை தொகுப்பாளர் எழுப்பினார். உடனடியாக வெட்கத்தில் சிரித்த நாக சைதன்யா, இந்த கேள்விக்கு நான் சிரிக்க மட்டுமே போகிறேன் என சிரித்து மழுப்பினார். இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள பலரும், நாக சைதன்யா பதிலளிக்காமல் மழுப்பியதில் இருந்தே, அவர் ஷோபிதாவுடன் டேட் செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரிவருகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola