அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் புதுமுக நடிகராக அறிமுகமாகி, இன்று சூப்பர் ஸ்டாராக தமிழ் திரையிலகில் ஷைனாகிக் கொண்டிருப்பவர் ரஜினி. இவர் நடித்த படங்களில் ஏதோ ஒன்று இரண்டு ஹிட் அல்ல, இவரது பெரும்பாலான படங்கள ஹிட்தான். நின்றால், நடந்தால், படுத்தால், நடித்தால் என தனக்கென தனி ஸ்டைலை கொண்டவர் ரஜினி.


இவரது பிறந்தநாள் அன்று சமூக வலைதளங்கள் அனைத்தும் தாறுமாறாக ரஜினியின் பெயரில் ட்ரெண்டாவது வழக்கம். அதே போல இன்றும், சமூக வலைதளங்கள் முழுவதும் ரஜினியின் போட்டோக்களாலும், பிறந்தநாள் வாழ்த்துக்களாலும் நிரம்பி வருகிறது. நடிகர் ரஜினிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில் சிலரது வாழ்த்துகளை பார்ப்போம் வாங்க..


ஹேப்பி பர்த்டே தலைவா…


நடிகர் ரஜினிகாந்திற்கு, பிரபலங்கள் வாழ்த்து.


முதலமைச்சர் வாழ்த்து


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அன்பு நண்பர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எனது அன்பு நண்பர் ரஜினிகாந்த, நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வருடம் மட்டுமன்றி, இதற்கு முந்தைய வருடமும் ரஜினிகாந்திற்கு முதல்வர் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 






எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


எதிர்கட்சியான அஇஅதிமுக கட்சியின் தலைவர் எடப்பாடி கே பழனிசாமியும், ரஜினியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், “ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளோடு இருக்க பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 


உலகநாயகனின் வாழ்த்து






நடிகர் கமல் ஹாசன், ரஜினிகாந்திற்கு தனது அன்பு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்” என்று ரஜினியை டேக் செய்து குறிப்பிட்டிருக்கிறார். 






மருமகனின் வாழ்த்து


நடிகர் ரஜினியின் மருமகனும், பிரபல நடிகருமான தனுஷ் ரஜினிக்கு “ஹேப்பி பர்த்டே தலைவா..” என தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.






அனிருத்


பிரபல இசையமைப்பாளர் அனிருத், ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில், எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக ஜெய்லர் படத்தின அப்டேட் குறித்த தகவலையும் தனது ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 






நீ மீச வச்ச குழந்தையப்பா..வைரமுத்து ட்வீட்


படையப்பா படத்தில் இடம் பெரும் “சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு பாடல் வரிகளையே ரஜினிக்கு வாழ்த்தாக தெரிவித்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. 






துல்கர் சல்மான்:


மலையாள நடிகர் துல்கர் சல்மானும் நடிகர் ரஜினிக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். தனது வாழ்த்தில், “ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார், நீங்கள் எப்போதுமே சிறப்பானவர். எங்களை எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டேயிருங்கள்” என குறிப்பிட்டிருக்கிறார்.






வரலக்ஷமி சரத்குமார்:


நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷமி சரத்குமார் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஹேப்பி பர்த்டே தலைவா என்று ட்வீட் செய்துள்ள அவர் உங்களது அன்பும் பணிவும் அனைவரையும் உற்சாகப்படுத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், லவ் யூ சார் என்றும் ரஜினியின் மேல் அன்பு மழை பொழிந்துள்ளார். 






இயக்குனர் வசந்த் ரவி






தரமணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு இன்ட்ரோ கொடுத்தவர் வசந்த் ரவி. இவர், நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் .