'அதான் ஃபயர்' அஜித் படங்களுக்கு மட்டும் ஏன் இப்படி இசை? மனம் திறந்த யுவன்ஷங்கர் ராஜா!

பிரபல இசையமைப்பாளர் அஜித் படங்களுக்கு மட்டும் சிறப்பான பி.ஜி.எம்.களை அமைப்பது எப்படி? என்று மனம் திறந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் வாரிசான யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அவரது தந்தையைப் போலவே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

யுவன்ஷங்கர் ராஜாவுக்கு இன்று 45வது பிறந்தநாள் ஆகும். அவருடைய பிறந்தநாளை  முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா எத்தனையோ நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தாலும் அவர் அஜித்தின் திரைப்படங்களுக்கு அமைக்கும் இசை ரசிகர்களுக்கு எப்போதும் தனி விருந்தாகவே அமைந்துள்ளது.

அஜித் படங்களுக்கு மட்டும் ஏன்?

Continues below advertisement

முதன்முறையாக அஜித்குமார் நடித்த தீனா படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்தார். அதன்பின்பு, அவரது படமான பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்தார். இதில் வலிமை தவிர மற்ற படங்களுக்கு அவர் அமைத்த இசையும், பி.ஜி.எம். எனப்படும் பின்னணி இசையும் மிகவும் பிரபலம் ஆகும்.


மனம் திறந்த யுவன்:

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு யுவன்ஷங்கர் ராஜா முன்பொரு முறை அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவரிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஜித் படத்திற்கு மட்டும் எப்படி இவ்வாறு அசத்தலாக பி.ஜி.எம். அமைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த யுவன்ஷங்கர் ராஜா, இயல்பாகவே நான் அவருடைய ரசிகர். அந்த ஃபயர்தான் வரும். எங்களுக்கு நல்ல கெமிஸ்ட்ரி. ஒரு மனிதனாக எனக்கு அவரைப் பிடிக்கும் என்று கூறியிருப்பார்.

யுவன்ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வீடியோ இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா அஜித்திற்காக அமைத்த தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம் பட பி.ஜி.எம்.கள் எப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்படும் பின்னணி இசையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola