Rashmi Gautam | லாக்டவுனில் டும்.. டும்.. டும்..! ரகசிய திருமணம் செய்துகொண்ட ராஷ்மி..!?

நடிகை ராஷ்மி கௌதமுக்கு திருமணம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இந்திய திரையுலகில் திரைக்கதை  மன்னன் என போற்றப்படுபவர் பாக்யராஜ். அவரது மகன் சாந்தனு நடித்து 2011ஆம் ஆண்டு வெளியான படம் கண்டேன். முகில் இயக்கிய இப்படத்தில் ராஷ்மி சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

Continues below advertisement

ராஷ்மி தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ’போலா சங்கர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் இருக்கிறார். ராஷ்மிகா தனது சமூக வலைதளங்களில் வெளியிடும் வீடியோக்களும், புகைப்படங்களும் ரசிகர்களின் ஆதரவை பெற்றுவருபவை.

 

இந்தச் சூழலில் ராஷ்மி கௌதம் தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரை காதலிப்பதாக கிசுகிசுக்க்கள் வெளியாகிவந்தன. ஆனால், ராஷ்மியும் சுதீரும் இதனை மறுத்தனர்.

அது மட்டுமின்றி அவர்கள் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்றனர். இதற்கிடையே தொழிலதிபர் ஒருவரை நடிகை ராஷ்மி கௌதம் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வெளியான தகவல் உண்மைதான் என தெலுங்கு சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது. அதேசமயம் இதுகுறித்து ராஷ்மி எந்தவொரு விளக்கமோ மறுப்போ இதுவரை தெரிவிக்கவில்லை.

தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்ந்துவரும் ராஷ்மி கௌதம், அவருடைய திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். தற்போது இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola