நடிகர்கள் விஜய் சேதுபதி, பஹத் பாசில் இருவருமே தற்போது பேன் இந்தியா நடிகர்களாகிவிட்டனர். இருவருக்கும் செம டிமாண்ட் உண்டு. இருவரும் இணைந்த சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் நடித்திருந்தனர். கமல் - விஜய் சேதுபதி -பஹத் என மூன்று பேருமே பட்டையைக் கிளப்பி இருந்தனர். இந்நிலையில்தான் புஷ்பா படம் தொடர்பான தகவலும் வெளியானது. புஷ்பா முதல் பாகத்தில் நடிகர் பஹத் கடைசியில் வந்து அடுத்த பாகத்துக்கான தொடக்கத்தை கொடுத்திருப்பார். மொட்டைத் தலையுடன் புது தோற்றத்துடன் நடித்திருந்தார் பஹத். ஆனாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைவான நேரமே அவர் படத்தில் வந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் பஹத்தின் போர்ஷன் அதிகம் எனக் கூறப்பட்டது.
விஜய் சேதுபதி
இதற்கிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புஷ்பா 2ல்நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. புஷ்பா முதல்பாகத்திலேயே விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததாகவும் ஒருசில காரணங்களால் அது நடக்காமல் போனதாகவும் கூறப்பட்டது. சீனியர் போலீஸாராக முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
வெளியான தகவல்..
இந்நிலையில்தான் விஜய் சேதுபதியின் வருகை பஹத்துக்கு சரிவரவில்லை என்றும் அதனால்படத்தில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. விக்ரம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த நிலையில் அப்படி என்ன சிக்கல் என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை என புஷ்பா படக்குழுவினர் நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. பஹத்தான் புஷ்பா இரண்டாம்பாகத்தின் முக்கிய கதாபாத்திரம் என்றும் முழு அர்ப்பணிப்போடு அவர் நடித்து வருவதாகவும், அவர் விலகுவதாக வெளியான தகவலெல்லாம் வதந்தி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.