தமிழ் சினிமாவின் யூத் ஹீரோக்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் தனது திருமணம் குறித்த அறிவிப்பினை சோஷியல் மீடியா மூலம் அறிவித்தார்.  ஹரிஷ் கல்யாண் திருமணம் அக்டோபர் 28-ஆம் தேதி   நடைபெற இருப்பதால் பிரஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்து அதன் மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். 


 



 


பிக்பாஸ் மூலம் பிரபலம் :


விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஹரிஷ் கல்யாண் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள டீசல் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் பெண்களின் ரோமியோவாக திகழ்ந்த ஹரிஷ் கல்யாண இந்த மாத தொடக்கத்தில் தனது திருமணம் குறித்த அறிவிப்பினை சோஷியல் மீடியா மூலம் உறுதிப்படுத்தினார். ஹரிஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இது அவரின் ரசிகைகளுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் காதல் மன்னனுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர். 






அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் :


பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாணின் தந்தை இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதை உறுதி செய்தார். இந்த நிலையில் ஹரிஷ் கல்யாணின் தந்தை கல்யாண் திருமணம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.  சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. முகுர்த்த நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை. இந்த திருமண விழாவிற்கு ரசிகர்கள் அனைவருக்கும் அழைப்பு வைத்து அனைவரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஹரிஷ் கூறுகையில் இதுவரையில் அவருக்கு ஆதரவு அளித்து ஊக்கமளித்த ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து அனைவரையும்  திருமணத்திற்கு அழைப்பு வைத்தார். ரசிகர்கள் பலரும் ஹரிஷ் கல்யாணுக்கு தங்களது வாழ்த்துக்களை சோஷியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள்.