பார்க்கிங்
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யான். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் , பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த படம் பார்க்கிங்
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்த படம் பார்க்கிங். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்த நிலையில், ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு கார் கார் பாங்கிங் செய்வதில் இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்படும் ஈகோ மோதல் எந்த அளவிற்கு செல்கிறது என்பதே இப்படத்தின் கதை.
எளிமையான திரைக்கதையில் கதாபாத்திரங்கலின் உளவியலை மிக ஆழமாக வெளிப்படுத்திய பார்க்கிங் படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் வசூலையும் அள்ளி குவித்தது. திரையரங்கத்தைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஹாட்ஸ்டாரில் வெளியானப் பின் இன்னும் பரவலான ரசிகர்களை சென்றடைந்தது இப்படம்.
ஐந்து மொழிகளில் ரீமேக்
எளிமை மற்றும் சுவாரஸ்யமான கதையைக் கொண்ட பார்க்கிங் திரைப்படம் மொத்தம் ஐந்து மொழிகளில் ரீமேக் உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நான்கு இந்திய மொழி ரீமேக் மற்றும் ஒரு அயல் மொழியிலும் இப்படம் ரீமேக் எடுக்க உள்ளார்கள்.
இதற்கு முன்னதாக மலையாளத்தில் மோகன்லால் நடித்து ஜீது ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் திரைப்படம் தமிழ் , இந்தி , தெலுங்கு , என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் கொரியா உட்பட 15 மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது.
அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம். த்ரிஷ்யம் படத்தைத் தொடர்ந்து பார்க்கிங் படமும் இன்னும் நிறைய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன.
மற்ற மொழிகளில் எடுக்கப்படும் படங்களை யார் இயக்கப்போகிறார்கள், எந்த நடிகர்கள் இதில் நடிக்கப் போகிறார்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.