லப்பர் பந்து


தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள படம் லப்பர் பந்து , ஸ்வசிகா விஜயகுமார் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , பால சரவணன் , ஜென்சன் திவாகர் , தேவதர்ஷினி , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கிரிகெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஃபேமிலி செண்டிமெண்ட் , அரசியல் , காமெடி என எல்லாம் கலந்த ஒரு முழுமையான படமாக அமைந்துள்ளது. 


லப்பர் பந்து திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 70 லட்சம் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. படம் அனைத்து தரப்பிடமும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடைசி உலகப்போர்


ஹிப்ஹாப் தமிழா இயக்கி , நடித்து இசையமைத்துள்ள படம் கடைசி உலகப்போர். நாசர் , நடராஜ் சுப்ரமணியம் , ஹரிஷ் உத்தமன் , முனிஷ்காந்த் , சிங்கம் புலி , இளங்கோ குமரவேல் , தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். வித்தியாசமான ஒரு கதைக்களத்துடன் நேற்று திரையரங்கில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 


கடைசி உலகப்போர் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ 50 லட்சம் வசூல் ஈட்டியதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 


நந்தன்


சசிகுமார் நாயகனாக நடித்து இரா சரவணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் நந்தன். பாலாஜி சக்திவேல் , சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இயக்குநர் இரா சரவணனின் இரா போர்டக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.  இன்றை சூழலில் பல்வேறு ஊர்களில் நடந்து வரும் சாதிய ஒடுக்குமுறையை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. 


நந்தன் திரைப்படத்தி முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சசிகுமார் முன்னதாக நடித்த அயோத்தி திரைப்படம் பெரியளவில் கவனமீர்த்தது. இதனால் நந்தன் படத்திற்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. 


இவை தவிர்த்து செப் 20 சீனு ராமசாமி இயக்கிய கோழி பண்ணை செல்லதுரை , தோனிமா உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் படக்குழு சார்பாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.