லப்பர் பந்து 

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. காலி வெங்கட் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் இன்று நடைபெற்றது. லப்பர் பந்து படத்தைப் பார்த்து சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். விமர்சகர்கள் லப்பர் பந்து படம் பற்றி எக்ஸ் தளத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம்

Continues below advertisement

லப்பர் பந்து விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் டிராமா தமிழில் உருவாகியிருப்பதாக விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யம் மற்றும் கதாபாத்திரங்களில் உணர்ச்சிகள் இரண்டும் கலந்து சிறப்பான ஒரு திரைக்கதையாக லப்பர் பந்து அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை 28 படத்திற்கு பின் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒரு சிறந்த படம் லப்பர் பந்து என்று குறிப்பிட்டுள்ளார். 

விளையாட்டை மையமாக வைத்து இயக்குநர் பேசும் அரசியல் , தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு , ஷான் ரோல்டனின் இசை என படத்தில் நிறைய பிளஸ் உள்ளன என மற்றொரு விமர்சகர் தெரிவித்துள்ளார்