Har Ghar Tiranga: பறக்கும் தேசியக்கொடி.. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான தேசப்பற்று பாடல் - முழு விபரம்!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள  'ஹர் கர் திரங்கா' வெளியாகியுள்ளது.

Continues below advertisement

பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் 'ஹர் கர் திரங்கா' என்ற தேசபக்தி பாடல் வெளியிட்டு இருக்கிறார்

Continues below advertisement

தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடிய இந்தப் பாடல் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசிற்காக கைலாஷ் பிக்சர்ஸ் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது.

 

                                     

இதைப் பற்றி பேசிய டிஎஸ்பி, “இந்த வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிய பாக்கியமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இப்பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. இதில் பணிபுரிந்துள்ள அற்புதமான மனிதர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இசையமைப்பில் உருவான 10 சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறும். மேலும் இப்பாடல் எனக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்," என்று கூறினார். 

 

"உலகெங்கிலும் நடைபெறும் எனது அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய இந்தியக் கொடியுடன் மேடையில் தோன்றி தேசபக்தி பாடல் ஒன்றை பாடுவேன்.

 

 

நம் தேசத்தின் மீது என் அன்பை வெளிப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பு இப்போது எனக்கு கிடைத்துள்ளது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்," என்று கூறினார்.

 

Continues below advertisement