நடிகை கீர்த்தி சுரேஷ்தனது  செல்லப்பிராணியான நாய்க்குட்டியுடன்  ஃப்ளைட்டில்  முதல் பயணம் செய்ததை இன்ஸ்டாவில் குஷி போஸ்டாக பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது . 

Continues below advertisement


செல்லப்பிராணி என்றாலே அனைவருக்கும் ப்ரியம் தான். அதற்காக மெனக்கெடுவது, அதன் மீது அன்பு செலுத்துவது அதன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுவது என அனைவரும் செய்து வருவோம். மன அழுத்தம் போன்ற நோய்களை செல்லப்பிராணிகளுடன் இருப்பவர்கள் எளிதாக கையாளமுடியும் என மருத்துவ ஆய்வுகளே கூறியுள்ளன.


இப்படி நாம் செல்லப் பிராணிகள் மீது காட்டும் அன்பிற்கு செல்லப் பிராணிகளும் நம்மை அதன் அன்பில் திக்குமுக்காடச் செய்யும் என்பது, செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு தெரியும். 






நடிகை கீர்த்தி சுரேஷும் யாங்க்கும்


அந்த வகையில் பிரபல தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியான யாங்க் எனும் நாயுடன் தனியார் ஃப்ளைட்டில்  முதல் முறையாக பயணம் செய்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படமாகவும் வீடியோவாக பகிர்ந்து, ”And that's my boy @iamnyke ’s first flight journey 😁” கேப்சனும் இட்டுள்ளார்.


இதனை மிகவும் குஷியாக பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த வீடியோ மிகவும் வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ், தனது செல்லப்பிராணியான நாய்க்குட்டி யாங்க்குக்கென தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தினை தொடங்கியுள்ளார். இந்த இன்ஸடாகிராம் பக்கத்தில் யாங்க்கை 37 ஆயிரத்து 200 இன்ஸ்டாவாசிகள் பின் தொடர்கின்றனர் என்பது சுவாரஸ்யத் தகவல். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண