வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ’விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு கொண்டாட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளைவரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ’விடுதலையின் அமிர்த மஹோத்ஸவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு கொண்டாட்டங்களை முன்னெடுத்து கொண்டாடி வருகிறது. 


குறிப்பாக கலைகள் மூலம் அன்று தொட்டு இன்றுவரை சுதந்திர தாகம், போராட்ட வரலாறு ஆகியவை விதைகப்பட்டும், பதிவு செய்யப்பட்டும் வருகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்களின் பட்டியலைக் காணலாம்.


ரங் தே பசந்தி


 ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கிய இப்படம் பகத் சிங்,  சுக்தேவ், ராஜ்குரு, சர்தார் உத்தம் சிங் ஆகியோரின் வரலாற்றை நினைவுகூறும் வகையில் அமைந்திருக்கும்.


 



சர்தார் உத்தம் சிங் 


ஷூஜித் சிர்காரின் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற இப்படம் ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் சுற்றி அமைந்திருக்கும்


சிட்டகோங்


உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, 1930 களில் கிழக்கு வங்காளத்தில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது.


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: த ஃபட்காட்டன் ஹீரோ


 



ஷியாம் பெனகல் இயக்கிய இப்படத்தில் நேதாஜி வேடத்தில் சச்சின் கெடேகர் இப்படத்தில் நடித்திருப்பார்.


வீரபாண்டிய கட்டபொம்மன்


ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றிய இப்படத்தில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவே வாழ்ந்து வீர வசனங்கள் பேசி கவர்ந்திருப்பார்.



ராஜபார்ட் ரங்கதுரை


 






நாடக நடிகர் ராஜபார்ட் ரங்கதுரையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம். இப்படத்தில்  பகத் சிங், திருப்பூர் குமரன் ஆகியோரின் பாத்திரங்களில் சிவாஜி தோன்றி அனைவரையும் கவர்ந்திருப்பார்.


இந்தியன்


சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சுன்யா நடித்துள்ள இப்படம் சுதந்திரப் போராட்ட வரலாறை நினைவுகூறும் வகையில் இப்படத்தின் காட்சிகள் அமைந்திருக்கும்.


டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர்


 






சுதந்திர இந்தியாவில் அம்பேத்கரின் பங்கை நினைவுகூறும் வகையிலான இப்படத்தில் மம்முட்டி அம்பேத்கராக நடித்திருப்பார். ஆங்கிலம் - இந்தி மொழிகளில் வெளியான இப்படத்தை ஜப்பர் பட்டேல் இயக்கியுள்ளார்.