நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில்   உருவாகிவரும் ”தளபதி 65 ”படத்தின் தலைப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. “ பீஸ்ட்”  என பெயர் வைக்கப்பட்ட ”விஜயின் 65”படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணியளவில் படக்குழுவினர் சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர். விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ”பீஸ்ட் “போஸ்டரை வெளியிட்டு  3  நிமிடங்களில்   32 ஆயிரத்து  200  ரீ ட்வீட் மற்றும் 53 ஆயிரத்து 800 லைக்குகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் விஜயின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் பிழை இருப்பதாக கூறி ரசிகர்கள் ரோஸ்ட் செய்து வருகின்றனர்.  பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் கடைசில்   Action Anbariv என்பதற்கு  பதில் Acton Anbariv என்று தவறாக நகலாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷார்ட்  எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்


 



 


இது ஒரு புறம் இருக்க விஜய் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி ”ஷார்ட் கன்”  வகையை சேர்ந்தது என்பதால் அதில் 8 x  ஸ்கோப்பினை எவ்வாறு பயன்படுத்த முடியும்  என்ற கேள்விகளை முன்வைத்து  பிற நடிகர்களின் ரசிகர்கள் கேளி செய்து வருகின்றனர்.   8 x   என்பது ஸ்னைப்பர் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் ஸ்கோப்பாகும். தூரத்தில் இருக்கும் பொருளை எட்டு மடங்கு அருகில் காட்டும் வகையில் இவ்வகை ஸ்கோப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும்.  விஜய் கையில் வைத்திருக்கும் ஷார்ட் கன் வகையானது வேட்டையாட பெரும்பாலும் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கோப்பானது  LEUPOLD VX   என கூறப்படுகிறது. இது பார்ப்பதற்கு   8 x   ஸ்கோப் போல தோற்றமளித்தாலும், LEUPOLD VX   ஷார்ட் கண்களுக்காக பயன்படுத்தப்படும் ஸ்கோப் வகை.  இது லாங் ரேஞ்ச் துப்பாக்கி சுடுதலின் போது ”ஷார்ட் கன்” துப்பாகிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விஜய் கையில் வைத்திருக்கும் துப்பாக்கியானது எந்த வகை ஷார்ட் கன் என ரசிகர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.  விஜய் ரசிகர்களோ அந்த துப்பாக்கி “ஸ்லக் ரைஃபில்” வகையை சார்ந்தது என கூறி வருகின்றனர். இதனால் குழப்பமான சூழல் நிலவினாலும், இது படத்திற்கான விளம்பரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


 



 



மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “விஜய் 65 “ படத்திற்கு நிறைய பெயர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதில் “பீஸ்ட் “ என்ற தலைப்பை விஜய் தேர்வு செய்ததாகவும் படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.  நாளை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நோக்கில்  இந்த போஸ்டர் வெளியானது ஆனால் போஸ்டரில் ஏற்பட்டிருக்கும் பிழைகள் மற்றும் துப்பாக்கி குறித்த சர்ச்சை உள்ளிட்டவைகள் விஜய் ரசிகர்களை சற்று கலக்கமடைய செய்துள்ளன.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் “பீஸ்ட் “ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தின் முதற்கட்ட  படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைப்பெற்று முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்பொழுது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் “பீஸ்ட் “ படத்தை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.