கியாரா அத்வானி கைக்குழந்தையாக நடித்த முதல் விளம்பரப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய பிறந்தநாளான இன்று அந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.


கியாரா அத்வானி  இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஒரு நடிகை. 2014ல் வெளிவந்த ஃபுக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். திரைப்படத்தில் அறிமுகமாகும் முன் கியாரா அனுபம் மற்றும் ரோஷன் தனேஜா ஆகியோரிடம் நடிப்பிற்கான பயிற்சியை பெற்றார். 


இருந்தாலும் கியாரா அத்வானி எம்.எஸ். தோனி படத்தில் நடித்த பின்னர் மிகுந்த கவனம் பெற்றார். அதன் பின்னர் நெட்ஃப்ளிக்சில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் (2018), மற்றும் தெலுங்கு அரசியல் படமான பரத் அனே நேனு (2018) போன்ற பல்வேறு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற திரைப்படங்களில், சீரிஸ்களில் நடித்துள்ளார். தற்போதும் அவர் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். அவர் நல்ல நடிகையாக அறியப்படுகிறார்.


க்யூட்டான குழந்தை வீடியோ:
கியாரா 1992 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி பிறந்தார். அவர் முதன்முதலாக கேமரா முன்னால் தோன்றியது ஒரு விளம்பரப் படத்திற்காக. அப்போது அவர் ஒரு கைக்குழந்தையாக இருந்தார். விப்ரோ பேபி சோப் விளம்பரத்தில் கியாரா குழந்தையாக குளியல் போட உடன் அவர் அம்மாவும் திரையில் தோன்றியிருப்பார். இந்த வீடியோவை பல ஆண்டுகளுக்கு முன் கியாராவே ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இன்று அவரது பிறந்தநாளை ஒட்டி அந்த வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது. 


இதோ அந்த வீடியோவுக்கான இணைப்பு:






 


சினிமா பின்னணி கொண்டவர்:


கியாரா அத்வானியின் தந்தை ஜகதீப் அத்வானி. அவரது தாயார் ஜெனீவ் ஜாஃப்ரி. ஜகதீப் அத்வானி ஒரு தொழிலதிபர். கியாராவின் இயற்பெயர் ஆலியா அத்வானி என்பதே.  இவர் திரைத்துறைக்காக தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றினார்.  பிரியங்கா சோப்ராவின் அஞ்சனா அஞ்சானி திரைப்படத்தை, பார்த்து தனது பெயரை கியாரா என்று மாற்றிக்கொண்டார் என்ற தகவலும் உண்டு. பிரியங்கா சோப்ராவின் மிக பெரிய ரசிகை கியாரா அத்வானி


கியாராவின் தாய்வழி குடும்பத்தின் மூலம் பல பிரபலங்கள் இவருக்கு உறவினர் ஆவார்கள். நடிகர்கள் அசோக் குமார் மற்றும் சயீத் ஜாஃப்ரி ஆகியோர் முறையே, இவரது தாத்தா, பாட்டி  ஆவார்கள். அதே போன்று ஷாஹீன் ஜாஃப்ரி மற்றும் நடிகை ஜூஹி சாவ்லா இவருடைய அத்தையாவார்கள். இத்தனை அழகான, திறமையான பின்னணி கொண்ட கியாரா அத்வானியின் அழகையும் திறமையையும் யாரேனும் கேள்விக்குறியாக்க முடியுமா என்ன?


இத்தகைய பின்புலம் கொண்ட கியாரா ஒருமுறை அவர் அளித்தப் பேட்டியில் திரைத்துறையில் குடும்பப் பின்னணி இருந்தால் அது நிச்சயமாக நீங்கள் வாய்ப்பு தேடும் போது சரியான நபர்கள் முன் உங்களை நிறுத்தும். ஆனாலும் திரைத்துறையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் இந்த பின்னணி எல்லாம் உதவாது. திறமை மட்டுமே பேசும் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.