ரூ.71 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும் நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1,089 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஒவ்வொரு தேர்வுக்கும் அடிப்படைத் தேவையான One Time Registration-ஐ ரூ.150 செலுத்தி, முன்பதிவு செய்துகொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு இந்த One Time Registration முன்பதிவு செல்லும். 


எந்தெந்தப் பணிக்கு எவ்வளவு காலி இடங்கள்?


நில அளவையர்- 794 + 4 இடங்கள் (4 இடங்கள் ஏற்கெனவே இருந்த காலிப் பணியிடங்கள் ஆகும்.) 


வரைவாளர் - 236 இடங்கள் 


உதவி வரைவாளர் - 55 இடங்கள் 


ஊதியம் 


இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.19,500- ரூ.71,900 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. 


இதன்படி தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான www.tnpsc.gov.in எனும் இணையளத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 


வரும் நவம்பர் 6ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஐடிஐ தரத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே நாளில், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. 


வயது வரம்பு


எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள், எஸ்டிக்கள், எம்பிசிக்கள்/ டிசிக்கள், பிசி முஸ்லிம்கள் மற்றும் ஓபிசி முஸ்லிம்கள் ஆகியோரைத் தவிர பிற சமூகத்தினர் அனைவருக்கும் 32 வயது அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள், எஸ்டிக்கள், எம்பிசிக்கள்/டிசிக்கள், பிசி முஸ்லிம்கள் மற்றும் ஓபிசி முஸ்லிம்கள் ஆகியோருக்கு உச்சபட்ச வயது வரம்பில்லை. 




தேர்வுக் கட்டணம்


இந்தத் தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


கல்வித் தகுதி உள்ளிட்ட பிற விவரங்களுக்குத் தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/Document/english/FS%20&%20DM%20English.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். 


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண