சில இசையமைப்பாளர்கள் நடிகர்களாகவும் தங்களது முத்திரையை பதித்துள்ளனர். அப்படி நடிகர் , இசையமைப்பாளர் என இரண்டிலும் சக்ஸசாக வெற்றி நடைபோடுபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். கடந்த 10 ஆண்டுகளில் ஜி.வி.பிரகாஷ்குமார் 50-க்கும் மேற்பட்ட ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒரு நடிகராக அவர் கிட்டத்தட்ட 30 படங்களில் நடித்துள்ளார். நேற்று ஜி.வி.பிரகாஷ் தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவறை பற்றிய சில சுவாரஸ்ய தொகுப்பை பார்க்கலாம்.







18 வயதில் அறிமுகம்:


ஜிவி பிரகாஷ் 2006-ஆம் ஆண்டு வெளியான வெயில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.


நடிகராக அறிமுகம் :


ஜி.வி.பிரகாஷ் 2015-ஆம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆண் அறிமுக நடிகர் என்னும் தென்னிந்திய‌ பிலிம்பேர் விருதைப் பெற்றார்.


ஏ.ஆர்.ரஹ்மான் சொந்தக்காரர்:


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு நெருங்கிய சொந்தக்காரர் .  ஜி.வி பிரகாஷின் தாய் மாமாதான்  ஏ.ஆர்.ரஹ்மான் . ஜி.வி-யின் தாய் AR ரெய்ஹானாதான் ஜி.வி.பிரகாஷின் அம்மா.ஜி.வி.பிரகாஷின் தாயும் ஒரு பின்னணிப் பாடகி.






மிகப்பெரிய இசையமைப்பாளர்களுடன்  பணியாற்றியவர்:


ஏஆர் ரஹ்மானின் பல்வேறு  புராஜெக்ட்களில் ஜிவி பிரகாஷின் பங்களிப்பும் முக்கியத்துவமாக இருந்திருக்கிறது. அதேபோல பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் பணியாற்றியுள்ளார் . அந்நியன் (2005) மற்றும் உன்னாலே உன்னாலே (2007) ஆகிய படங்களில்  ஹிட் பாடல்களையும் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.


ஆசை :
பள்ளி நாட்களில், அவர் ஒரு பொறியியலாளராகவோ அல்லது கிரிக்கெட் வீரராகவோ ஆக வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்.  இசையமைப்பாளராக வேண்டும் என்பது அவர் எதிர்பார்க்காத ஒன்று!