இசை உலகின் ஜாம்பவான், இசைஞானி , மாஸ்ட்ரோ என கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. மூன்று தலைமுறை கடந்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இளையராஜா , ரசிகர்களுக்காக லைவ் இசை விருந்து படைத்து வந்தார். கொரோனா சிக்கல் போன்ற காரணங்களால் , நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தனது லைவ் இசை நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் துபாய் எக்ஸ்போவில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்தவர்.


தற்போது சென்னை தீவுத்திடலில் நேற்று (மார்ச் 18 ) பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தி  முடித்துள்ளார். இந்த இசை நிகழ்ச்சியில் தேவிஸ்ரீபிரசாத் , யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களும் பாடகர்களும் பங்கேற்றனர்.






நடிகர் தனுஷ் இசை நிகழ்ச்சிக்கு தனது இரண்டு மகன்களுடன் வந்து முன் வரிசையில் அமர்ந்து இசை நிகழ்ச்சியை கண்டுக்களித்தார். அப்போது வள்ளி படத்தில் இடம்பெற்ற “ என்னுள்ளே..என்னுள்ளே” என்னும் பாடல் பாடி முடிக்கப்பட்ட பிறகு , தனுஷை எழுந்து நிற்க சொன்ன இளையராஜா..பாட்டு பிடிச்சிருக்கா..இந்த பாடல் ஒழுங்கா வர உன் மாமனார்தான் காரணம். அவர்தான் காட்சி சூழலை எடுத்து கூறியதால்தான் சிறப்பாக வந்தது என கூற , தனுஷ் தலை அசைத்தபடி புன்னகைத்து, கைதட்டினார். அதன் பிறகு மேடையில் பேசிய தனுஷ் “ இளையராஜா சார் பாடி முடித்த பிறகு கரெக்‌ஷன்ஸ் சொல்லுவாங்க. அவர் இருந்தா எனக்கு பாட வராது. அன்னைக்குன்னு பார்த்து அவர் போகவே இல்லை. எனக்கு ரொம்ப பதட்டமாயிடுச்சு. நான் கேட்டேன் சார் நீங்க கூடவே இருக்க போறிங்களா..உடனே என்னை நிமிர்ந்து பார்த்தாரு ...”எப்போ நான் உன் கூட இல்லை “ அப்படி பதிலுக்கு கேட்டாரு..நான் சொன்னேன் ..சார் நான் என் அம்மா வயிற்றுல இருக்கும் பொழுதிருந்தே நீங்க என் கூடதான் இருக்கீங்க அப்படினு” . தனுஷ் இளையராஜாவை புகழ்ந்து பேசிய இந்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷ் மேடையில் இளையராஜா பாடல்களையும் பாடி அசத்தினார்.






நடிகர் தனுஷ் பாடகராகவும் கலக்கி வருகிறார்.  இளையராஜா இசையில் ஒரு சில பாடல்களை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.