தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுடன் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.


 



 


கடந்த சில மாதங்களாகவே டிசம்பர் 4 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இருவருமே உறுதிப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இதனையடுத்து கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ஹன்சிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் பாரீஸில் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அவர்களின் காதலை உறுதிப்படுத்தினார். 


 






 


வைரலாகும் திருமண போட்டோஸ் :



கடந்த நவம்பர் 22 ஆம் தேதி ஹன்சிகா மற்றும் சோஹேலின் திருமணத்திற்கு முந்தைய மத சடங்குகள் (Mata Ki Chowki) கோலாகலமாக தொடங்கின. கடந்த 2 ஆம் தேதி சூஃபி இசைக்கச்சேரியுடன் தொடங்கிய திருமண சடங்குகள் தொடங்கின. தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி நலங்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று (டிசம்பர் 4 -2022) இரவு  ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த கியூட் தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு காட்டு தீ போல பரவி வருகிறது. 


குட்டி குஷ்பூ திருமணம் இனிதாக நிறைவேறியதை எண்ணி அவரின் ரசிகர்கள் ஒரு புறம் சந்தோஷத்தில் மிதக்க, மறுபுறம் இளைஞர்களின் கனவு கன்னியை வலம் வந்த தேவதையின் திருமணம் முடிந்ததை எண்ணி மிகவும் சோகமாக இருக்கிறார்கள் இளவட்டங்கள்.