இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் பிரபல நடிகையாக உருவெடுத்தவர் ஹன்சிகா மோத்வானி. 


ஹன்சிகா தனது நீண்ட கால நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியாவை சென்ற டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.


சீரிஸாக திருமண நிகழ்வுகள்


ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள  பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் கோலாகலமாக  நடைபெற்ற இவர்களது திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.


ஆனால், தனது நண்பரின் கணவரை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார் எனத் சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில்,  ஹன்சிகாவின் திருமண நிகழ்வுகள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்  வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானது.


லவ் ஷாதி டிராமா எனப் பெயரிடப்பட்ட இந்த வீடியோவின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மொத்தம் 8 எபிசோடுகளாக ஹன்சிகாவின் திருமண நிகழ்வுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.


முந்தைய காதல்...


இந்த ட்ரெய்லரில் தனது முந்தைய காதல் பற்றி பேசியுள்ள ஹன்சிகா மனம் திறந்து பேசியுள்ளார். அதில் நான் ஏற்கெனவே பொதுமக்களின் பார்வையில் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன். நான் அதை மீண்டும் செய்ய விரும்பவில்லை.


ஆனால் அது மீண்டும் எனக்கு திடீரென நிகழ்ந்தது. நான் மீண்டும் ஊர் அறிய ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் செல்வதானால் அது நான்  திருமணம் செய்து கொள்ளும் நபராக தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


 






சிம்புவுடனான உறவு


கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது ஹன்சிகா காதலில் விழுந்தார். ஆனால் சில மாத காலத்திலேயே இவர்களது காதல் முறிந்தது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வெளியான மஹா படத்தில் ஹன்சிகா - சிம்பு இந்த ட்ரெய்லரில் தனது முந்தைய காதல் பற்றி பேசியுள்ள ஹன்சிகா மனம் திறந்து பேசியுள்ளார். இருவரும் மீண்டும் இணைந்து நடித்தனர். 


இந்நிலையில் தன் திருமண நிகழ்வுகள் குறித்த ட்ரெய்லரில் சிம்பு குறித்த ஹன்சிகா நினைவுகூர்ந்துள்ளது கவனமீர்த்துள்ளது.


திருமண ஆடைகள் தேர்வு செய்வது தொடங்கி, திருமணம் குறித்து பரவிய சர்ச்சைத் தகவல்கள் வரை  பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஹன்சிகா கனவுத் திருமணத்தைக் காண்பிக்கும் ட்ரெய்லாக வெளியாகியுள்ள இந்த வீடியோ வைரலாகியுள்ளது.