பொங்கலுக்கு ஹெச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் மூன்றாவது முறையாக வெளியான திரைப்படம் 'துணிவு'. ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் இயக்குனர் ஹெச். வினோத்துடன் ஒரு நேர்காணல் நடைபெற்றதில் பல கேள்விகளுக்கு அதிரடியான பதில் மூலம் தெளிவு படுத்தியுள்ளார். 



வசூல் குறித்து கேள்விப்பட்டீர்களா ?


ஜனவரி 11ம் தேதி துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் திரையிடப்பட்டன. ரசிகர்களுக்கு எந்த திரைப்படம் எவ்வளவு வசூலித்தது என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ரசிகர்களுக்கு அதை தெரிந்துகொள்வதில் எந்த ஒரு பயனும் இல்லை என்றாலும் அவர்களின் ஆர்வம் அதில் தெரிந்து. அதே போன்ற எதிர்பார்ப்பு உங்களிடமும் இருந்ததா? உங்களின் காதுகளுக்கு பர்ஸ்ட் டே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்பது தெரிய வந்ததா? என கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் ஹெச். வினோத் கொடுத்த தகவல் மிகவும் ஸ்வாரஸ்யமாக  இருந்தது.


பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி உங்களின் கருத்து:


பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது என்பது புதிய வியாதி. அது உடனடியாக குணப்படுத்தப்பட வேண்டும். ஏன் என்றால் அதில் உண்மையே கிடையாது. அது முற்றிலுமே யூகம் தான். ஏனென்றால் முழுமையான ரிப்போர்ட் வருவதற்கு சில நாட்கள் எடுக்கும். பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என ஒரு நம்பர் கூறப்படுவதில் இருந்து 40% கூட தயாரிப்பாளருக்கு கிடைக்காது. அதில் ஷேர், கமிஷன், ஜி.எஸ்.டி என ஏராளமானவை உள்ளடங்கும். எனவே அது வெறும் யூகமே அதில் உண்மை கிடையாது. இதன் விளைவாக தற்போது தயாரிப்பாளர்களே பொய் சொல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.






துணிவு படம் பார்த்து அஜித் என்ன சொன்னார் :


நடிகர் அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வெளியான பிறகு இயக்குனரிடம் நடிகர் அஜித் ஒரிஜினல் படத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காமல்  ரீ மேக் செய்துவிட்டோம் என்றார். அதே போல வலிமை திரைப்படம் வெளியான பிறகு படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் நாம் ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளோம் என்ற திருப்பி உள்ளது என்றாராம். அதே போல துணிவு திரைப்படத்தை பார்த்த நடிகர் அஜித் என்ன கூறினார் என்று கேட்டால் இயக்குனர் உடனே அஜித் சார் இன்னும் துணிவு படத்தை பார்க்கவே இல்லை என்றார். டப்பிங் சமயத்தில் அவர் பார்த்துள்ளார் ஆனால் தியேட்டருக்கு சென்று அவர் சீரியஸாகவே இன்னும் பார்க்கவில்லை. பார்த்த பிறகு நிச்சயமாக அவரின் கருத்தை தெரிவிப்பார்.


எல்லையை மீறும் கொண்டாட்டங்கள் :


மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு, ஏராளமான கொண்டாட்டங்கள் இருக்கவே செய்யும். அதுவே ஒரு எல்லையை தாண்டும் போது விபரீதமான ஒரு முடிவே ஏற்படும். அதற்கு உதாரணமாக நடந்த சம்பவம் தான் மிட் நைட் கொண்டாட்டத்தின் போது ரோகினி திரையரங்கத்தில் நடைபெற்ற சம்பவம். இது குறித்த அவரின் கருத்து மிகவும் தெளிவாக இருந்தது. "நான் சபரி மலைக்கு சென்று இருந்ததால் இந்த தகவல் சற்று தாமதமாகவே எனக்கு வந்து சேர்ந்தது. பல முறை இது குறித்து இன்டெர்வியூ, டிஸ்கஷன் அனைத்திலும் அஜித் சாரே இது குறித்து சொல்லி இருந்தார். அந்த சமயத்தில் அவர்களுக்கு இருக்கும் எஸ்க்ஸைட்மென்ட்டில் செய்து விடுகிறார்கள். ஆனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும், அவர்களின் குடும்பத்திற்கு இது ஒரு பெரிய இழப்பாக இருக்கும். சிலர் ஆறுதல் சொல்ல வேண்டும் என்பார்கள், சிலர் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பார்கள். அதன் மூலம் இழப்பை சரி செய்யவே முடியாது. அதை நாம் என்கரேஜ் செய்யவும் கூடாது. அதன் மூலமாக பணம் மட்டும் அல்ல பெயரையும் சம்பாதிக்கலாம் என நினைப்பது அனைத்துமே நெகட்டிவாகவே போய் முடியும். இதை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு இனிமேலாவது இது போன்ற கொண்டாட்டங்கள், மிட் நைட் விஷயங்களை கண்ட்ரோலில் வைத்து கொள்வது நல்லது" என்றார்.