அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாக உள்ளது. U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் வலிமை திரைப்படம் 2:58 மணி நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வந்திருக்கிறது. இந்நிலையில், ரசிகர்கள் எதிர்ப்பாத்து காத்திருக்கும் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை பிப்ரவரி 23 முதல் மார்ச் 3-ம் தேதி வரையிலா காட்சிகளுக்கு, காசி, தேவி, கசினோ உள்ளிட்ட திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும், முன்பதிவு தொடங்கிய சில நேரத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால் வலிமை பட முதல் நாள் காட்சிக்கான கவுண்டவுன் ஆரம்பாகி உள்ளது. நேர்கொண்ட பார்வையில் இணைந்த அஜித், வினோத் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் படம் ரிலீசுக்கான தேதி நெருங்கிவிட்ட நிலையில் ப்ரோமோக்களை அள்ளித்தூவி வருகிறது தயாரிப்பு நிறுவனம். சமீபத்தில் வெளியான 'நாங்க வேற மாறி' பாடல் க்ளிப் இணையத்தில் வைரலானது. அப்பாடலில் அதிகம் வைரலான தகதகனு மின்னலாம் வரிக்கான அஜித்தின் டான்சே ப்ரோமோவாக வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
அதேபோல் யுவனின் மாஸ் இசையுடன் அதிரடி காட்சிகளுடன் ஒரு ப்ரோமோவும் வெளியானது. ஹீமா குரோஷியின் மாஸ் காட்சிகள், அஜித்தின் அதிரடி காட்சிகள் என அந்த ப்ரோமோவும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் இன்று என்னமாதிரியான ப்ரோமோ வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வலிமை படத்தை அடுத்து, வினோத், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப்படத்தில் ஆக்ஷன் கம்மியாகவும், வசனங்கள் அதிகமாக இருக்கும் என்று இயக்குநர் வினோத் ஏற்கனவே அறிவித்திருந்தார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்